தமிழ்நாடு

“நவம்பர் 10ஆம் தேதி அதிகனமழை வெளுக்கும்” : தமிழ்நாட்டுக்கு Red Alert விடுத்த இந்திய வானிலை ஆய்வு மையம்!

நவம்பர் 10ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய பகுதிகளுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலெர்ட் விடுத்துள்ளது.

“நவம்பர் 10ஆம் தேதி அதிகனமழை வெளுக்கும்” : தமிழ்நாட்டுக்கு Red Alert விடுத்த இந்திய வானிலை ஆய்வு மையம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

வங்கக் கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ளதை அடுத்து, வரும் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில், தமிழகத்தில், மிக கனமழை முதல் அதி தீவிர கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த இரு நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் நேற்று முன்தினம் முதல் தொடர்ந்து பெய்து வரும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தென்கிழக்கு வங்கக் கடல் முதல் தமிழக கடலோரப் பகுதி வரை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது, நாளை தெற்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நவம்பர் 10ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ‘ரெட் அலெர்ட்’ எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் மிருத்யுஞ்ஜய் மஹாபாத்ரா அளித்துள்ள பேட்டியில், “கடந்த 24 மணிநேரத்தில் சென்னையில் கனமழை முதல் மிக கனமழை வரை பதிவாகியுள்ளது. இன்று தீவிரம் சற்று குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். வங்காள விரிகுடாவில் 9-ஆம் தேதி உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, 11-ஆம் தேதி காலை வட தமிழக கடலோரப் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக உருவாகும்.

இதனால் நவம்பர் 10, 11 ஆகிய தேதிகளில் தமிழகம், தெற்கு ஆந்திரா ஆகிய பகுதிகளில் மிக கனமழை பெய்யக்கூடும். இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு நோக்கி பயணிக்கும்போது வரும் மழையின் அளவு 12ஆம் தேதி குறையும்.” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories