தமிழ்நாடு

"தீவிரமடைந்த வடகிழக்கு பருவமழை.. 416 நடமாடும் மருத்துவக்குழுக்கள் தயார்": ராதாகிருஷ்ணன் தகவல்!

416 நடமாடும் மருத்துவக்குழுக்கள் தயாராக இருப்பதாக ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

"தீவிரமடைந்த வடகிழக்கு பருவமழை..  416 நடமாடும் மருத்துவக்குழுக்கள் தயார்": ராதாகிருஷ்ணன் தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து அரசு மருத்துவமனைகளில் கூடுதல் மருத்துவக்குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் மாவட்ட, தாலுகாக மருத்துவமனைகள் தயாராக உள்ளது.

மேலும் தமிழ்நாடு முழுவதும் 416 நடமாடும் மருத்துவக்குழுக்கள், 770 ஜீப் மருத்துவக்குழுக்கள் மருத்துவ உதவி தேவைப்படும் இடங்களுக்கு விரைந்து செல்லும் வகையில் தயார்ப்படுத்தப்பட்டுள்ளன.

அதேபோல் அனைத்து மருத்துவமனைகளிலும் மருந்துகள், பாம்புகடி, பூச்சிக்கடிக்கான மருந்துகள், ஐவி திரவங்கள், டெட்டனஸ் மருந்துகள் கையிருப்பில் வைக்கப்பட்டுள்ளன. மருத்துவ உதவிக்காகப் பொதுமக்கள் 044 - 29510400, 044 - 29510500, 9444340496, 8754448477 என்ற எண்ணுக்கு எந்த நேரமும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories