தமிழ்நாடு

“பழுக்க வைத்த இருப்பு கம்பியால் ‘தீவிரவாதி’ என எழுதிய ஜெயிலர்” : பஞ்சாப் சிறைவாசிக்கு நேர்ந்த கொடூரம்!

பஞ்சாப்பில் சிறைவாசியின் முதுகில் ‘தீவிரவாதி’ என இரும்புக் கம்பியால் எழுதி சூடு வைத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“பழுக்க வைத்த இருப்பு கம்பியால் ‘தீவிரவாதி’ என எழுதிய ஜெயிலர்” : பஞ்சாப் சிறைவாசிக்கு நேர்ந்த கொடூரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

பஞ்சாப் மாநிலம் பர்னாலா சிறையில் 28 வயதாகும் கரம்ஜித் சிங் என்ற இளைஞர் உள்ளார். இவர் சமீபத்தில் போதைப் பொருள் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு, அந்த வழக்கு விசாரணைக்காக மான்சா மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு உள்ளார்.

அப்போது, “சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள், மிகவும் பரிதாபகரமான நிலையில் உள்ளனர். எய்ட்ஸ், மஞ்சள் காமாலை உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப் பட்டுள்ள நோயாளிகளுக்கு, தனி அறைகள் ஒதுக்கப்படவில்லை. கைதிகளை தவறாக நடத்துவதற்கு எதிராக, தான் குரல் கொடுத்த காரணத்திற்காக, சிறைக் கண்காணிப்பாளர் என்னை தாக்குகிறார். தொடர்ந்து சித்ரவதை செய்கிறார்” என்று நீதிபதியிடம் கரம்ஜித் சிங் முறையிட்டுள்ளார்.

அத்துடன் தனது முதுகில் ‘பயங்கரவாதி’ என்ற பொருள் படும், ‘அட்வாடி’ என்ற வார்த்தையை பழுக்க வைத்த இரும்பிக் கம்பியால் எழுதி முத்திரை குத்தியதாகவும் குற்றம் சாட்டி னார். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பஞ்சாப் துணை முதல்வர் சுக்ஜிந்தர் சிங் ரந்தாவா தற்போது விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories