தமிழ்நாடு

“இன்ஸ்டாகிராம் பழக்கத்தால் நடந்த பாலியல் வன்கொடுமை” : 14 சிறுமியை கடத்திய இளைஞர் போக்சோவில் கைது!

சென்னை மணலியில் 14 வயது சிறுமியை இன்ஸ்டாகிராமில் பழகி ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் போலிஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

“இன்ஸ்டாகிராம் பழக்கத்தால் நடந்த பாலியல் வன்கொடுமை” : 14 சிறுமியை கடத்திய இளைஞர் போக்சோவில் கைது!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சென்னை மணலியில் 14 வயது சிறுமியை இன்ஸ்டாகிராமில் பழகி ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் போலிஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சென்னை மணலி பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமியை காணவில்லை என்று மணலி காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர். அந்த புகாரின்பேரில் பேரில் போலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டனர்.

விசாரணையில், திருவாரூர் மாவட்டம் திருராமேஸ்வரம் கோட்டகச்சேரி பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய கோபிநாத் என்ற இளைஞர் இன்ஸ்டாகிராமில் அறிமுகமாகி காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஊருக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு சிறுமியை பாலியல் வல்லுறவும் செய்ததாக தெரியவந்தது.

இதனையடுத்து எண்ணூர் அணைத்து மகளிர் போலிஸார் 14 வயது சிறுமியை மீட்டு இன்ஸ்டாகிராமில் மோசடியில் ஈடுபட்ட கோபிநாத்தை போக்சோ சட்டத்தில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories