தமிழ்நாடு

“அடுத்த 2 மாதங்கள் சவாலானதாக இருக்கும் - நோய் தடுப்பு பணிகளில் கவனம் வேண்டும்” : ராதாகிருஷ்ணன் கடிதம்!

மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார்.

“அடுத்த 2 மாதங்கள் சவாலானதாக இருக்கும் - நோய் தடுப்பு பணிகளில் கவனம் வேண்டும்” : ராதாகிருஷ்ணன் கடிதம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

அடுத்த 2 மாதங்கள் சவாலானதாக இருக்கும் என்றும் நோய்த் தடுப்பு பணிகளில் கவனம் வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம் அனுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் எழுதிய கடிதத்தில், “மழைக்காலம் மற்றும் குளிர்காலத்தில் டெங்கு உள்ளிட்ட நோய்கள் அதிகம் பரவ வாய்ப்புள்ளது. இதனால் மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என அரசு வலியுறுத்தி வருகிறது.

ஏ.டி.எஸ் பெண் கொசுக்களால் டெங்கு காய்ச்சல் பரவுகிறது. டெங்கு காய்ச்சல் ஏற்பட்டால் உடனே மருத்துவச் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். இல்லை என்றால் உயிரிழப்பு அபாயம் ஏற்படக்கூடும். கண்வலி, குமட்டல், தலைவலி, வாந்தி, எலும்பு வலி, தடிப்புகள் , மூட்டு வலி, சோர்வு உள்ளிட்டவை டெங்கு காய்ச்சலின் அறிகுறிகளாகும்.

இந்த நோயிலிருந்து தப்பிக்க மக்கள் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். கொசுக்கள் உற்பத்தி இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மழைக்காலங்களில் ஏற்படும் நோய்களைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் தயாராக இருக்க வேண்டும்.

கொரோனாவையும் கட்டுப்படுத்தும் பணிகளில் உரிய கவனம் செலுத்த வேண்டும். அடுத்த 2 மாதங்கள் சுகாதாரத்துறைக்குச் சவாலானதாக இருக்கும். எனவே நோய்த் தடுப்பு பணிகளில் தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்த வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories