தமிழ்நாடு

"தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் நிலவரம் என்ன?" : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!

தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் கட்டுப்பாட்டில் இருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

"தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் நிலவரம் என்ன?" : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை சைதாப்பேட்டை தொகுதியில் உள்ள பாரதி தெருவில் சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.30 லட்சம் மதிப்பிலான நவீன உடற்பயிற்சிக் கூடத்தை இன்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்துவைத்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், "தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் தற்போது கட்டுப்பாட்டில் உள்ளது. 340 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர். அனைத்து மாவட்டங்களிலும் சுகாதார அலுவலர்கள் டெங்கு குறித்தான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

மேலும், சுகாதார ஊழியர்கள் தேங்கியிருக்கும் தண்ணீரை அகற்றுவது, தினமும் கொசு மருந்து அடிப்பது, புகை மருந்து அடிப்பது, லார்வாக்களை அழிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். பண்டிகைக் காலங்களில் தன்னார்வலர்கள் வந்தால் சுகாதாரத்துறையுடன் இணைந்து செயல்பட வாய்ப்பளிப்போம்" எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories