தமிழ்நாடு

திருநங்கைகள் வாழ்க்கை தரத்தை உயர்த்த விரைவில் கொள்கை வரைவு? - நர்த்தகி நட்ராஜ் முக்கிய தகவல்!

இந்தியாவில் முதல் முறையாக திருநங்கைகள் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் வகையில் கொள்கை வரைவினை விரைவில் முதலமைச்சர் வெளியிடவுள்ளார் என நர்த்தகி நட்ராஜ் தெரிவித்துள்ளார்.

திருநங்கைகள் வாழ்க்கை தரத்தை உயர்த்த விரைவில் கொள்கை வரைவு? - நர்த்தகி நட்ராஜ் முக்கிய தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை மயிலாப்பூரில் உள்ள St.Raphaels பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் திருநங்கைகளை தொழில் முனைவோர்களாக மாற்றுவது குறித்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு அரசின் திட்டக்குழு உறுப்பினர் பத்மஸ்ரீ நர்த்தகி நட்ராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தோழி அமைப்பின் மூலம் சுய தொழில் செய்ய தேர்ந்தெடுக்கப்பட்ட 40 திருநங்கைகளுக்கு 10 அரிசி மூட்டைகளை முதலீடாக வழங்கி தொடங்கி வைத்தார்.

அதனை தொடர்ந்து மேடையில் பேசிய தமிழ்நாடு திட்டக்குழு உறுப்பினர் நர்த்தகி நட்ராஜ், திருநங்கைகளுக்கு பொற்காலம் இது என்றும் தமிழக முதலமைச்சர் திருநங்கைகளுக்கான வளர்ச்சியில் கவனம் செலுத்தி வருகிறார். திருநங்கைகள் ஒவ்வொருவரும் சுயமாக முன்னேற வேண்டும். திருநங்கைகள் சமூகத்துடன் இணைந்து வாழவேண்டும். சுய ஒழுக்கமும், சுய மரியாதையையும் தான் சமூகத்தில் நமக்கான மரியாதையை பெற்றுத்தரும் என பேசினார்.

நான் திருநங்கை என்பதை 30 வருடங்களுக்கு முன்பே பெருமையுடன் அறிவித்தேன். எனது திறமையை வைத்தே எனக்கான வாய்ப்பை பெற்றேன். ஒரு போதும் நான் திருங்கை என்பதால் எனக்கு வாய்ப்பு தாருங்கள் என கேட்டதில்லை. முத்தமிழறிஞர் கலைஞரின் ஆட்சியின் போது ஒரு விழாவில் திருநங்கை என்ற வார்த்தையை நான் பயன்படுத்தியதை பார்த்து திருநங்கை என சமூகத்திற்கே பெயர் சூட்டி அழகு பார்த்தார். திருநங்கை என்ற அழகான வார்த்தைக்கு இணையாக இந்தியாவில் எந்த மாநிலத்திலும் உருவாக்க முடியவில்லை என பெருமிதம் தெரிவித்தார்.

தலைவர் கலைஞர் ஆட்சியில் திருங்கைகளுக்கு வழங்கிய உதவிகளை தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து உதவி வருகிறார். பரத நாட்டியத் துறையில் சாதி, மத அடிப்படையில் கூட என்னால் வளர முடியாத நிலை இருந்ததது. ஆனால் பரதநாட்டியத்தில் எனது திறமையை வைத்து வளர்ந்துள்ளேன். கலைஞர் இருந்தால் என்ன செய்வாரோ அதனை செய்துவிட்டேனா என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்னிடம் கேட்டார். ஒவ்வொரு திருநங்கையும் வெற்றியாளராக வரவேண்டும். உங்களை தொழில் முனைவோர்களாக பார்க்கவேண்டும். வெற்றி கூட்டத்தில் உங்களை சந்திக்க ஆசைப்படுகிறேன் என நர்த்தகி நடராஜ் கூறினார்.

அதனை தொடர்ந்து செய்தியளர்களை சந்தித்து பேசிய நர்த்தகி நட்ராஜ், திருநங்கைகள் அனைவருக்கும் நலவாரியம் அமைத்து அனைவரையும் தொழில் முனைவோர்களாக, உயர்த்திய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த அவர் இதன் மூலம் திருநங்கைகளுக்கு சமூகத்தில் சம வாய்ப்பு கிடைக்கும் என கூறினார். சமூகத்தில் அனைவருக்கும் சம உரிமை வழங்கும் போது எங்களுடைய பங்களிப்பும் இருக்கும். உலகமே திரும்பி பார்க்கும் வகையில் தமிழகத்தில் திருநங்கைகள் செயல்படுவார்கள்.

தமிழ்நாடு அரசின் தமிழ்நாடு கொள்கை வளர்ச்சி குழு சார்பில் இந்தியாவிலே முதல் முறையாக விரைவில் திருநங்கைகளுக்கு கொள்கை வரவினை முதலமைச்சர் வெளியிட உள்ளார் எனக் கூறினார்.

banner

Related Stories

Related Stories