தமிழ்நாடு

இதுதான் முழுமையான மக்கள் நல அரசு.. கைவிடப்பட்டவர்களுக்காக சிறப்பு திட்டம் ஏற்படுத்திய சென்னை மாநகராட்சி!

சென்னை மாநகராட்சி தொடங்கிய 'அவசர பராமரிப்பு மற்றும் மீட்பு மையம்' திட்டம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதுதான் முழுமையான மக்கள் நல அரசு.. கைவிடப்பட்டவர்களுக்காக சிறப்பு திட்டம் ஏற்படுத்திய சென்னை மாநகராட்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

சென்னை மாநகராட்சியில் வசிக்கும் வீடற்றோர் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டோரை மீட்டு சிகிச்சை அளிக்கும் வகையில் சென்னை மாநகாட்சி தொடங்கிய திட்டம் வரவேற்பைப் பெற்றுள்ளது.

முந்தைய அ.தி.மு.க ஆட்சியின்போது கொரோனா ஊரடங்கு காலத்தில் சாலையில் வசிக்கும் வீடற்றவர்களும் மனநலம் குன்றியவர்களும் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டனர்.

மக்கள் அவசியமின்றி வெளியே வரத் தடை விதிக்கப்பட்டதால், ஆதரவற்றோர் ஒருவேளை உணவுக்கே சிரமப்பட்டனர். அ.தி.மு.க அரசு அவர்களைக் கைவிட்ட நிலையில் தனியார் அமைப்புகளைச் சேர்ந்தவர்களும், தனிநபர்களும் உணவு கொடுத்து உதவினர்.

இந்நிலையில், வீடற்றோர் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டோரை மீட்டு மருத்துவச் சிகிச்சை அளிக்கும் வகையில், 'அவசர பராமரிப்பு மற்றும் மீட்பு மையம்' என்ற திட்டத்தை சென்னை மாநகராட்சி தொடங்கி உள்ளது.

இத்திட்டத்தை கடந்த ஜூலை 29ஆம் தேதி, தண்டையார்பேட்டை தொற்று நோய் மருத்துவமனையில் அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், சேகர்பாபு ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இதுதான் முழுமையான மக்கள் நல அரசு.. கைவிடப்பட்டவர்களுக்காக சிறப்பு திட்டம் ஏற்படுத்திய சென்னை மாநகராட்சி!

சென்னை மாநகராட்சியின் சிறப்பான இத்திட்டத்தால் சென்னையில் உள்ள 400க்கும் மேற்பட்ட மனநலம் குன்றியவர்களும் 1,800க்கும் மேற்பட்ட வீடற்றவர்களும் பயனடைவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக இத்திட்டத்தில் சாலையோரம் வசிக்கும் மக்களை மீட்க ஆறு வாகனங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இந்த திட்டத்தில் இதுவரை 35 மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மீட்கப்பட்டு தண்டையார்பேட்டை மருத்துவமனையில் உள்ள மீட்பு மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இம்மையத்தில் உள்ளவர்களுக்கு மனநல மதிப்பீடு மற்றும் கோவிட் சோதனைகள் நடத்தப்பட்டு மருத்துவ உதவி தேவைப்படுவோருக்கு சிறப்பு கவனம் அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

banner

Related Stories

Related Stories