தமிழ்நாடு

ஊரக உள்ளாட்சித் தேர்தல்.. 76 மாவட்ட கவுன்சிலர் - 161 ஒன்றிய கவுன்சிலர்: திமுக கூட்டணி தொடர்ந்து முன்னிலை!

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க முன்னிலையில் உள்ளது.

ஊரக உள்ளாட்சித் தேர்தல்.. 76 மாவட்ட கவுன்சிலர் - 161 ஒன்றிய கவுன்சிலர்: திமுக கூட்டணி தொடர்ந்து முன்னிலை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் கடந்த 6, 9 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடந்தது,

அதேபோல் 28 மாவட்டங்களில் காலியாக உள்ள 130 ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணியிலிருந்து விறுவிறுப்பாக எண்ணப்பட்டு முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கிறது.

140 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் இதுவரை 76 இடங்களில் தி.மு.க முன்னிலையில் உள்ளது. அதேபோல்1380 ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் தி.மு.க 161 இடங்களில் முன்னிலையிலிருந்து வருகிறது.

கள்ளக்குறிச்சி: 5 மாவட்ட கவுன்சிலர், 15 ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் தி.மு.க முன்னிலையில் உள்ளது. வேலூரிலும் 5 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் தி.மு.க முன்னிலை பெற்று வருகிறது.

செங்கல்பட்டில் 5 மாவட்ட கவுன்சிலர் இடங்களிலும், காஞ்சிபுரத்தில் 27 ஒன்றிய கவுன்சிலர் இடங்களிலும் தி.மு.க முன்னிலையிலிருந்து வருகிறது.

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க கடும் பின்னடைவைச் சந்தித்து வருகிறது. இதுவரை வந்த முடிவுகளின் படி மாவட்ட கவுன்சிலர் இடத்திற்கு இதுவரை ஒரு இடத்தில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. அதேபோல் ஒன்றிய கவுன்சிலர் இடத்திலும் 3 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது.

banner

Related Stories

Related Stories