தமிழ்நாடு

“ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில்கூட இல்லாத கொடுமை பா.ஜ.க ஆட்சியில் நடக்கிறது” : ஜோதிமணி MP குற்றச்சாட்டு!

ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில்கூட இல்லாத கொடுமை பா.ஜ.க ஆட்சியில் நடக்கிறது என ஜோதிமணி எம்.பி குற்றம்சாட்டியுள்ளார்.

“ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில்கூட இல்லாத கொடுமை பா.ஜ.க ஆட்சியில் நடக்கிறது” : ஜோதிமணி MP குற்றச்சாட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

திருச்சி மாவட்டம், மணப்பாறை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மருங்காபுரி மற்றும் வையம்பட்டி ஆகிய ஒன்றியங்களில் நடைபெறும் இடைத்தேர்தலில் தி.மு.க கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து இன்று கரூர் எம்.பி ஜோதிமணி பிரச்சாரம் மேற்கொண்டார்.

அனைத்து தரப்பு மக்களையும் சந்தித்து வாக்கு சேகரித்த அவர் வளநாடு பகுதியில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணியாற்றி வந்த தொழிலாளர்களைச் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.

பின்னர் கல்லாமேடு பகுதியில் செய்தியாளர்களைச் சந்தித்த எம்.பி ஜோதிமணி, “ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் கூட இல்லாத கொடுமை, அடக்குமுறை இந்த பா.ஜ.க ஆட்சியில் கட்டவிழ்த்து விடப்படுகின்றது. வேளாண்மை சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என்று விவசாயிகள் போராடி வரும் நிலையில் அவர்களின் மீது பா.ஜ.க ஒன்றிய அமைச்சரின் மகன் காரை ஏற்றி இருக்கிறார்.

இந்த அரசு விவசாயிகளுக்கு எதிரான அரசாக மட்டுமல்லாமல் விவசாயிகளை படுகொலை செய்யும் அரசாகவும் உள்ளது. ஆகவே, சம்பந்தப்பட்ட பா.ஜ.க ஒன்றிய அமைச்சரின் மகனை கைது செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும். போராடுகிற விவசாயிகளின் ஒவ்வொரு சொட்டு ரத்தமும் 2024ஆம் ஆண்டு தேர்தலில் பா.ஜ.க-விற்கு எதிரான வாக்காக அமையும்” எனத் தெரிவித்தார்.

முன்னதாக உள்ளாட்சித் தேர்தலில் முறைகேடு நடைபெறுவதாக அ.தி.மு.க குற்றம்சாட்டியது தொடர்பாக பேசிய அவர், பா.ஜ.கவிற்கு அடிமையாக இருந்த அ.தி.மு.க ஆட்சி மக்களால் அகற்றப்பட்டுள்ளது. தற்போது உள்ளாட்சி தேர்தலிலும் பா.ஜ.கவிற்கு அடிமையாகத்தான் உள்ளனர். அவர்கள் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பே இல்லை என்பதால், அரசியல் ஆதாயத்திற்காக அ.தி.மு.கவினர் இப்படிப் பேசி வருகின்றனர் என்று கூறினார்.

banner

Related Stories

Related Stories