தமிழ்நாடு

“பெட்ரோல் இருக்கிறதா இல்லையா என்று பார்க்கும் போது தீ விபத்து” : முதியவரின் விபரீத முடிவால் நடந்தது என்ன?

தனது இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் இருக்கிறதா இல்லையா என்று பார்க்க போய் முதியவர் ஒருவர் வாகனத்தை பறிகொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“பெட்ரோல் இருக்கிறதா இல்லையா என்று பார்க்கும் போது தீ விபத்து” : முதியவரின் விபரீத முடிவால் நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே தெக்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தியாகராஜன். இவர் அருகில் உள்ள பொன்னமராவதி பகுதியில் கூலி வேலை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் தனது இருசக்கர வாகனத்தை சர்வீஸ் செய்துவிட்டு வீட்டுக்கு ஓட்டி வந்துள்ளார். அப்படி வரும் வழியிலேயே பாதிலேயே வாகனம் நின்றுள்ளது. இதனையடுத்து தனது இருசக்கர வாகனத்தில் பெற்றோர் இருக்கா என்பதை பார்ப்பதற்காக, பெட்ரோல் டேங்கை திறந்து தீக்குச்சியை உரசிப் பற்ற வைத்துள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக பெட்டோல் டேங்கில் இருந்து தீ பிடித்து, தீ மளமளவென எரியத் தொடங்கியது. இதில் தீ பரவியதில் தியாகராஜன் விலகியதால் காயமின்றி தப்பித்தார். இதனையடுத்து வாகனம் முழுவதும் தீப்படித்து எரிந்தது. பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயைக் அணைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories