இந்தியா

“வங்கி கணக்கே இல்லாத கூலித் தொழிலாளர் பெயரில் 10 கோடி ரூபாய் டெபாசிட்” : பீகாரில் தொடரும் வங்கி குளறுபடி!

பீகாரில் வங்கியில் கணக்கே இல்லாத கூலித் தொழிலாளர் பெயரில் 10 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“வங்கி கணக்கே இல்லாத கூலித் தொழிலாளர் பெயரில் 10 கோடி ரூபாய் டெபாசிட்” : பீகாரில் தொடரும் வங்கி குளறுபடி!
IANS_ARCH
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

பீகார் மாநிலத்தில், வங்கிகளின் தவறுகளால் கடந்த சில நாட்களாக சாமானிய மக்களின் கணக்கில் கோடிக்கணக்கில் பணம் வரவு வைக்கப்படுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது. அதைத் தொடர்ந்து,

கடந்த வாரம் பீகாரின் ககாரியா பகுதியை சேர்ந்த ஒருவரின் வங்கி கணக்கில் ரூ. 5 லட்சம் தவறுதலாக வரவு வைக்கப்பட்டது. இதனை கண்டுபிடித்த வங்கி அதிகாரிகள் சம்பந்தப்பட்டவரை தொடர்புகொண்டு பணத்தை திருப்பி தருமாறு கோரினர். ஆனால் அவர், பிரதமர் தருவதாக கூறிய ரூ. 15 லட்சத்தின் முதல் தவணை தொகைதான் எனக் கருதி அந்தப் பணத்தை எடுத்து செலவு செய்துவிட்டதாகவும், திருப்பித் தர முடியாது எனவும் கூறி அதிகாரிகளுக்கு அதிர்ச்சியளித்தார்.

அதேபோல பீகாரின் கதிஹார் மாவட்டத்தில் பள்ளியில் 6ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இருவரின் வங்கிக் கணக்கில் ரூ.960 கோடி வரவு வைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து கடந்த 17ம் தேதி, பீகாரின் முசார்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி ராம் பகதூர் ஷாவின் வங்கிக் கணக்கில் ரூ.52 கோடி வரவு வைக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“வங்கி கணக்கே இல்லாத கூலித் தொழிலாளர் பெயரில் 10 கோடி ரூபாய் டெபாசிட்” : பீகாரில் தொடரும் வங்கி குளறுபடி!

இந்நிலையில், வங்கியில் கணக்கே இல்லாத கூலித் தொழிலாளர் பெயரில் 10 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் சிசானி கிராமத்தை சேர்ந்தவர் கூலிதொழிலாளி விபின் சவுகான். இவர் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் இணைவதற்காக, வங்கி கணக்கு தொடங்க முற்பட்டபோது, அவர் பெயரில் ஏற்கனவே வங்கி கணக்கு இருப்பதாக தெரியவந்தது.

மேலும் அவரது கணக்கில் ரூ.9 கோடியே 99 லட்சம் டெபாசிட் செய்யப்பட்டிருப்பது கண்டும் திகைத்தனர். மேலும் வங்கி அதிகாரிகளை தொடர்பு கொண்டு சவுகான் இதுகுறித்து கேள்வி எழுப்பியபோது, வங்கி அதிகாரிகளை தொடர்பு கொண்டு சவுகான் தெரிவித்தார்.

சவுகான் பெயரில் கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வங்கி கணக்கு தொடங்கப்பட்டு, 2017-ம் ஆண்டு பிப்ரவரி வரை கோடிக்கணக்கில் பணப்பரிமாற்றம் நடந்துள்ளது என்றும்சவுகான் பெயரில் உள்ள வங்கி கணக்கில் அவரின் புகைப்படம், கைரேகை, கையொப்பம் என எதுவுமே இல்லை. ஆதார் கார்டு எண் மட்டுமே அவருடையதாக இருந்தாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து இதுதொடர்பாக வங்கிகணக்கை முடக்கி அதிகாரிகள் முடக்கியுள்ளனர். பீகாரில் அடுத்தடுத்து தவறுதலாக பணம் வரவு வைக்கப்பட்ட செய்திகள் வெளிவருவது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories