தமிழ்நாடு

“இனி தமிழ் பாடத்தாளில் 45 மதிப்பெண் எடுத்தால் மட்டுமே அரசு வேலை” : TNPSC அதிரடி முடிவு!

டி.என்.பி.எஸ்.சி தேர்வில் புதிய மாற்றங்களைச் செய்யத் தேர்வாணையம் திட்டமிட்டுள்ளது.

“இனி தமிழ் பாடத்தாளில் 45 மதிப்பெண் எடுத்தால் மட்டுமே அரசு வேலை” : TNPSC அதிரடி முடிவு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாட்டில் அரசு பணிகளுக்கு டி.என்.பி.எஸ்.சி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. குரூப் 1, குரூப் 2, குரூப் 3 என்ற என்ற அடிப்படையில் இந்த தேர்வுகள் நடைபெறுகிறது. இந்நிலையில், இந்த தேர்வில் டி.என்.பி.எஸ்.சி தேர்வாணையம் புதிய மாற்றங்களை கொண்டுவர திட்டமிட்டுள்ளது.

அதாவது, அனைத்து தேர்வுகளுக்கு முன்பும் தமிழ்மொழித்தாள் என்ற தேர்வு முதலில் நடத்தப்பட முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், இந்த தேர்வில் 45 மதிப்பெண்கள் எடுத்து தகுதி பெற்றால் மட்டுமே அடுத்த தேர்வுகளை எழுத முடியும் என்ற புதிய மாற்றத்தைத் தேர்வாணையம் கொண்டுவர முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அரசு பணியில் பெண்களுக்கு 40% இட ஒதுக்கீடு என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இதற்கான அரசாணை வெளிவந்தவுடன், டி.என்.பி.சி தேர்வில் புதிய மாற்றத்தைக் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மாற்றம் காரணமாகத் தமிழ் மொழி அல்லாதவர்கள் டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் அடுத்த கட்டத்திற்குச் செல்ல முடியாது என்பதால் முழுக்க முழுக்க தமிழர்கள் மட்டுமே பணி நியமனம் பெறும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories