தமிழ்நாடு

ஓரினச்சேர்க்கைக்கு மறுத்ததால் 10 வயது சிறுவன் மீது இளைஞர் கொலைவெறித் தாக்குதல் - சென்னை அருகே பயங்கரம்!

10 வயது சிறுவன் மீது இளைஞர் கொலைவெறித் தாக்குதல் செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஓரினச்சேர்க்கைக்கு மறுத்ததால் 10 வயது சிறுவன் மீது இளைஞர் கொலைவெறித் தாக்குதல் - சென்னை அருகே பயங்கரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னையை அடுத்த மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியின் மகன்தான் பாதிக்கப்பட்ட சிறுவன். தனியார் பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கும் சிறுவனின் வயது 10.

வறுமையின் காரணமாக பள்ளி நேரம் போக ஆலப்பாக்கம் பகுதியில் தியேட்டர் உள்ளிட்ட பகுதிகளில் மாலை வேளையில் சுண்டல் விற்று வருகிறார்.

இப்படி இருக்கையில், நேற்று முன்தினம் வெகு நேரமாகியும் சிறுவன் வீடு திரும்பாததால் பதற்றமடைந்த பெற்றோர் மதுரவாயல் காவல் நிலையத்தில் புகாரளித்திருக்கிறார்கள். அதனடிப்படையில் சிறுவனை தேடி வந்தனர் போலிஸார்.

இந்நிலையில், ஏரிக்கரை அருகே உள்ள தனியார் பள்ளிக்கு எதிரே உள்ள மேம்பாலத்தின் கீழ் சிறுவன் ஒருவன் பலத்த காயங்களுடன் மயங்கி கிடந்ததை அறிந்து போலிஸார் விரைந்த போது தாங்கள் தேடி வந்த சிறுவன் என்பது தெரியவந்தது.

ஓரினச்சேர்க்கைக்கு மறுத்ததால் 10 வயது சிறுவன் மீது இளைஞர் கொலைவெறித் தாக்குதல் - சென்னை அருகே பயங்கரம்!
DELL

இதனையடுத்து முதலுதவிக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கும், மேல் சிகிச்சைக்காக ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கும் சிறுவனை அனுப்பியுள்ளனர்.

இதனிடையே சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்ததில் பாதிக்கப்பட்ட சிறுவன் 18 வயதான இளைஞருடன் சென்றது பதிவாகியிருந்தது. விசாரித்ததில் 11ம் வகுப்பு முடித்துவிட்டு கல்வியை தொடராமல் மது, கஞ்சா என போதை பழக்கத்துக்கு அடிமையான நபர் என்பது தெரியவந்திருக்கிறது.

சம்பவத்தன்று சுண்டல் விற்றுக் கொண்டிருந்த சிறுவனிடம் போதையில் இருந்த அந்த இளைஞன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட முயற்சித்திருக்கிறான். அப்போது சிறுவன் மறுத்து தப்பிக்க முயன்றதால் அந்த இளைஞன் கற்களை கொண்டு சிறுவன் மீது கடுமையாக தாக்கியிருக்கிறார்.

இதனை அந்த இளைஞனே ஒப்புக்கொண்டதை அடுத்து அவரை கைது செய்து போலிஸார் மேலும் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.

banner

Related Stories

Related Stories