தமிழ்நாடு

பணம், நகை, கார் மட்டுமில்லாமல் மணலை லோடு லோடாக திருடி பதுக்கிய KC.வீரமணி - இன்னும் என்ன என்ன இருக்கோ?

முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணியின் வீட்டு வளாகத்தில் சுமார் 275 யூனிட் மணல் (தோராயமாக ரூ.30 லட்சம் மதிப்பிலான) குவித்து வைக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

பணம், நகை, கார் மட்டுமில்லாமல் மணலை லோடு லோடாக திருடி பதுக்கிய KC.வீரமணி - இன்னும் என்ன என்ன இருக்கோ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் பத்திரப்பதிவு துறை அமைச்சராக இருந்தவர் கே.சி.வீரமணி. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் வந்ததைத் தொடர்ந்து, கே.சி.வீரமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை எஸ்.பி தலைமையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

வருகின்றன மேலும் அவருக்கு சொந்தமான ஏலகிரி மலையில் உள்ள பங்களா மற்றும் அவருடைய மனைவிக்கு சொந்தமான இடங்கள் அதனைத்தொடர்ந்து திருப்பத்தூர் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.ஜி.ரமேஷ், ஜோலார்பேட்டை சட்டமன்ற ஒன்றிய கவுன்சிலர் ரமேஷ் நாட்றம்பள்ளி, முன்னாள் கவுன்சிலர் மலகொண்ட ராஜா மற்றும் பல்வேறு பகுதியில் இருக்கக்கூடிய 35 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தற்போது சோதனை மேற்கொண்டனர்.

இந்நிலையில் லஞ்ச ஒழிப்பு போலிஸார் நடத்திய சோதனையில், பணம் ரூ.34,01,060/-, ரூ.1,80,000/- மதிப்பிலான அன்னிய செலாவாணி டாலர், 9 சொகுசு கார்கள் (ஒரு ரோல்ஸ் ராய்ல்ஸ் உட்பட), 5 கம்ப்யூட்டர் ஹார்டு - டிஸ்க்குகள், சொத்துக்கள் சம்மந்தப்பட்ட முக்கிய ஆவணங்கள், 4.987 கிலோ கிராம் (623 சவரன்) தங்க நகைகள், 47 கிராம் வைர நகைகள், 7.2 கிலோ கிராம் வெள்ளி பொருட்கள் மற்றும் வங்கி கணக்கு புத்தகங்கள் ஆகியவை கண்டறியப்பட்டு, வழக்கிற்கு தொடர்புடைய பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

மேலும், முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணியின் வீட்டு வளாகத்தில் சுமார் 275 யூனிட் மணல் (தோராயமாக ரூ.30 லட்சம் மதிப்பிலான) குவித்து வைக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

banner

Related Stories

Related Stories