தமிழ்நாடு

முதலமைச்சரின் வேண்டுகோளை ஏற்று ஆதரவளித்த அ.தி.மு.க... ‘நீட்’ நிரந்தர விலக்கு மசோதா பேரவையில் நிறைவேற்றம்!

நீட் விலக்கு மசோதா தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

முதலமைச்சரின் வேண்டுகோளை ஏற்று ஆதரவளித்த அ.தி.மு.க... ‘நீட்’ நிரந்தர விலக்கு மசோதா பேரவையில் நிறைவேற்றம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

நீட் தேர்வுக்கு நிரந்தர விலக்கு பெறும் மசோதாவை தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தாக்கல் செய்த நிலையில் அவையிலிருந்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

தங்களது ஆட்சியில் நீட் நுழைவுத்தேர்வை அனுமதித்துவிட்டு நீட் தேர்வை எதிர்ப்பதாக அ.தி.மு.க கூறிவரும் நிலையில், எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாணவர்களின் நலன் கருதி நீட் விலக்கு மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு அளிக்கவேண்டும் கோரிக்கை விடுத்தார்.

இதையடுத்து, நீட் மசோதாவுக்கு அ.தி.மு.க, பா.ம.க ஆகிய கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன. பா.ஜ.க வெளிநடப்பு செய்த நிலையில், மற்ற கட்சிகளின் ஆதரவுடன் நீட் விலக்கு மசோதா ஒருமனதாக நிறைவேறியது.

+2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்தும் வகையிலான தமிழ்நாடு அரசின் நீட் விலக்கு மசோதா சட்டப்பேரவையில் நிறைவேறியது.

நீட் தேர்வுக்கு எதிரான சட்ட மசோதாவுக்கு அ.தி.மு.க ஆதரவு அளித்ததற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories