தமிழ்நாடு

காசு தரலனா புகார் கொடுப்பியா? போதையில் டீக்கடையை துவம்சம் செய்த அடாவடி பேர்வழி - CCTVயால் சிக்கிய இளைஞர்!

பல நாட்களாக குடித்த டீக்கு காசு தராமல் அலைக்கழித்து வந்தவரை கேள்வி கேட்ட உரிமையாளரை தாக்கிய இளைஞர்.

காசு தரலனா புகார் கொடுப்பியா? போதையில் டீக்கடையை துவம்சம் செய்த அடாவடி பேர்வழி - CCTVயால் சிக்கிய இளைஞர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கேரளாவைச் சேர்ந்த ரியாஸ் என்பவர் சென்னையை அடுத்த நாவலூரில் 3 ஆண்டுகளாக ஜூஸ் மற்றும் டீக்கடை ஒன்றை நடத்தி வருகிறார்.

கடந்த ஒரு மாதமாக ரியாஸின் கடைக்கு அருகே தினேஷ் என்பவர் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார். அவ்வப்போது ரியாஸ் கடையில் டீக்குடித்து விட்டு கணக்கில் வைத்துக்கொள்ளும்படி கூறி காசு கொடுக்காமல் இருந்திருக்கிறார் தினேஷ்.

இப்படி இருக்கையில் குடித்த டீக்கு காசு கேட்ட ரியாஸிடம் மிரட்டும் தொணியில் விக்னேஷ் பேசியிருக்கிறார். இதனால் கட்டட உரிமையாளரிடம் தினேஷின் செயல் குறித்து புகார் தெரிவித்திருக்கிறது.

காசு தரலனா புகார் கொடுப்பியா? போதையில் டீக்கடையை துவம்சம் செய்த அடாவடி பேர்வழி - CCTVயால் சிக்கிய இளைஞர்!

இதனையடுத்து உரிமையாளர் அழைத்து பேசியதால் ஆத்திரமடைந்த தினேஷ், என்னை பற்றி புகாரா கூறுகிறாய் என்று நேற்றிரவு மது போதையில் ரியாஸின் டீக்கடையை சேதப்படுத்தி அங்கிருந்த பொருட்களை உடைத்து கலாட்டா செய்திருக்கிறார். மேலும், ரியாஸையும் தாக்கியிருக்கிறார் தினேஷ்.

பின்னர் கேளம்பாக்கம் போலிஸாரிடம் ரியாஸ் புகாரளித்ததை அடுத்து சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏற்கெனவே விக்னேஷ் மீது இரண்டு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

banner

Related Stories

Related Stories