தமிழ்நாடு

“இடிக்காம ஆடுடா..”: திருமண நிகழ்ச்சியில் போதையில் நடனம் ஆடியபோது ஏற்பட்ட தகராறில் 3 பேருக்கு கத்திகுத்து!

சென்னை தண்டையார்பேட்டையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடனம் ஆடுவதில் ஏற்பட்ட தகராறில் 3 பேருக்கு கத்திகுத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“இடிக்காம ஆடுடா..”: திருமண நிகழ்ச்சியில் போதையில் நடனம் ஆடியபோது ஏற்பட்ட தகராறில் 3 பேருக்கு கத்திகுத்து!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சென்னை தண்டையார்பேட்டையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடனம் ஆடுவதில் ஏற்பட்ட தகராறில் இருதரப்பினர் இடையே மோதலில் 3 பேருக்கு கத்திகுத்து ஏற்பட்ட சம்பவத்தால் திருமண மண்டபத்தில் இருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

சென்னை தண்டையார்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், நேற்று மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மணமகன் மற்றும் மணமகள் வீட்டாரை சேர்ந்த இருதரப்பினரும் நடனம் ஆடி கொண்டிருந்தனர். அப்போது இருதரப்பினரிடையே திடீர் மோதல் ஏற்பட்டது.

பின்னர், மண்டபத்தின் கழிவறை பகுதியில் இருதரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் ஒருகட்டத்தில் முற்றவே ஒரு தரப்பினர் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து எதிரில் இருந்தவர்களை வெட்டியுள்ளனர்.

“இடிக்காம ஆடுடா..”: திருமண நிகழ்ச்சியில் போதையில் நடனம் ஆடியபோது ஏற்பட்ட தகராறில் 3 பேருக்கு கத்திகுத்து!

இந்த தாக்குதலில் தினேஷ், யுவராஜ், ஹேமந்த ஆகிய 3 பேருக்கும் தலையில் வெட்டுகாயம் ஏற்பட்டது. இதனால் திருமண மண்டபத்தில் திடீர் பதற்றம் ஏற்பட்டு இதனால் திருமண மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் அலறியடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

மேலும் சம்பவம் தொடர்பாக புதுவண்ணாரப்பேட்டை போலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலிஸார் படுகாயமடைந்த 3 பேர் சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர் .

மேலும் சம்பவத்தில் கத்தியை எடுத்து தாக்கியது தொடர்பாக ஆகாஷ், ஜான், தோத்து என்கிற வினோத், லொட்ட வசந்த் ஆகிய 4 பேரையும் போலிஸார் தேடி வருகின்றனர். மேலும் விசாரணையில் இருதரப்பினரும் வரவேற்பு நிகழ்ச்சியில் போதையில் நடனம் ஆடியபோது மோதல் ஏற்பட்டு கத்திகுத்து சம்பவம் ஏற்பட்டது தெரியவந்தது.

banner

Related Stories

Related Stories