வைரல்

“மத்தி மீன்கள் அழிவதால் பேராபத்தை எதிர்கொள்ளும் மனித குலம்” : காலநிலை மாற்றம் நமக்கு சொல்லும் பாடம் என்ன?

பெரும்புயல் நேர்ந்து கடுமையான மழையை இந்த கடலோர நகரங்கள் சந்தித்துக் கொண்டிருக்கும்போது, அதிக அலைகள் கடலில் இருந்தால் என்ன ஆகும்?

“மத்தி மீன்கள் அழிவதால் பேராபத்தை எதிர்கொள்ளும் மனித குலம்” : காலநிலை மாற்றம் நமக்கு சொல்லும் பாடம் என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
ராஜசங்கீதன்
Updated on

மத்தி மீன் நாம் அறிந்திருப்போம். கடல்வாழ் மீன் வகை. ஆரோக்கியத்துக்கும் ருசிக்கும் அருமையான உணவு. மத்தி மீனின் வாழ்க்கைச் சூழல் பற்றிய அறிவுக்கும் நம் வாழ்க்கைச்சூழலின் அறிவுக்கும் இடையில் ஒரு தொடர்பு உண்டு.

மத்தி மீன் கேரளா மற்றும் கர்நாடகா கடலோரங்களில் மிக அதிகமாக கிடைக்கும் வகை. ஆனால் அந்த நிலைமை தற்போது மாறியிருக்கிறது. மிகப் பெரிய எண்ணிக்கையிலான மத்தி மீன்கள் குஜராத் மற்றும் மகாராஷ்டிரா கடலோரங்களில் கிடைக்கத் தொடங்கியிருக்கிறது. மீனவர்களின் மீன்பிடி தூரமும் இதனால் அதிகரித்திருக்கிறது. மத்தி மீனுக்கான தேவை கர்நாடகா, மகாராஷ்டிரா பகுதிகளிலும் மிகக் குறைவுதான். கேரளா, கர்நாடகா கடலோரத்திலிருந்து குஜராஜ், மகாராஷ்டிரா வரையிலான நெடுந்தூரத்துக்கு பயணிக்க வேண்டிய நிர்ப்பந்தம் மத்தி மீன் வகைக்கு என்ன நேர்ந்தது?

மத்திகள் உயர்ந்த வெப்பநிலையை விரும்பும் மீன் வகை ஆகும். கிட்டத்தட்ட 28 டிகிரி செல்சியஸ்ஸுக்கும் அதிக அளவிலேனும் கடல் நீரின் வெப்பம் இருக்க வேண்டும். கடலின் வெப்பம் அதிகரிக்கும்போது இந்த மீன்கள் தங்களின் எல்லைகளை விரிவுப்படுத்திக் கொள்கின்றன.

“மத்தி மீன்கள் அழிவதால் பேராபத்தை எதிர்கொள்ளும் மனித குலம்” : காலநிலை மாற்றம் நமக்கு சொல்லும் பாடம் என்ன?

மத்தி மீன் மட்டுமென இல்லாமல் பல மீன்களின் வாழ்க்கைகள் கடந்த சில வருடங்களில் மாற்றப்பட்டிருக்கின்றன. பல மீன்களின் இனவிருத்திக் காலமும் மாறியிருக்கிறது. உதாரணமாக கானாங்கெளுத்தி மீன்!

வழக்கமாக கோடை உச்சம் பெறும் காலத்தில் முட்டையிடும் வழக்கம் கொண்டது கானாங்கெளுத்தி மீன். தற்போது காலநிலை மாற்றத்தால் எப்போது கோடைக்கான காலம் அதிகரித்திருக்கிறது. எப்போது கோடை என தெரிய முடியாத அளவுக்கு எப்போதும் வெப்பம் கொளுத்துகிறது. விளைவாக, கோடை வழக்கமாக தொடங்கும் காலத்துக்கும் இரண்டு மாதங்களுக்கு முன்னமே முட்டைகள் இட ஆரம்பித்திருக்கின்றன கானாங்கெளுத்தி மீன்கள்.

இயற்கையின் போக்கின்படி இதுவரை உணவு அதிகம் கிடைக்கும் காலத்தில்தான் எந்த உயிரினமும் முட்டைகள் இடும். கானாங்கெளுத்தி மீனுக்கு உணவு கிடைக்கும் காலமாக கோடைகால உச்சம் இருந்தது. கோடை கால உச்சத்தை கடல் நீரின் வெப்பம் அவற்றுக்கு உணர்த்திக் கொண்டிருந்தன. இப்போது கோடை கால மாதங்களுக்கும் முன்னமே கோடை வெப்பத்தை கடல் நீர் அடைந்துவிடுகிறது. கோடை கால உச்சம் என அந்த வெப்பத்தை நம்பி கானாங்கெளுத்தி மீன்கள் முட்டையிடுகின்றன. ஆனால் கோடை கால உச்ச மாதங்களில் கிடைக்கும் அதே அளவு உணவு இரண்டு மாதங்களுக்கு முன்னமே மீன்களுக்கு கிடைக்குமா?

“மத்தி மீன்கள் அழிவதால் பேராபத்தை எதிர்கொள்ளும் மனித குலம்” : காலநிலை மாற்றம் நமக்கு சொல்லும் பாடம் என்ன?

7500 கிலோமீட்டர் நீள கடலோரப் பகுதியை கொண்டது இந்திய நாடு. ஒன்பது மாநிலங்கள் கடலோரங்களை பெற்றிருக்கின்றன. பல மாநிலத் தலைநகரங்கள் கடலோரத்தில் அமைந்திருக்கின்றன. வங்காள விரிகுடாவில் தொடங்கும் கிழக்கு கடலோரம் புயல்களுக்கு பெயர்பெற்றது. எல்லா புயல்களும் வங்காள விரிகுடா கடலில் உருவாகியிருக்கிறது. ஆச்சரியம் என்னவெனில் பெரும்பாலும் அமைதியாகவே இருந்து வந்த அரபிக் கடலின் மேற்கு கடற்கரையோரத்திலும் புயல்கள் உருவாகத் தொடங்கியிருக்கின்றன. இங்குதான் மகாராஷ்டிராவின் தலைநகரான மும்பை இருக்கிறது.

மும்பை நகரம் உருவான முறையே வித்தியாசமானது. மிகவும் தாழ்வான பகுதியில் இடம்பெற்றிருக்கும் நகரம் அது. சுமாராக 200 ஆண்டுகளுக்கு முன்பு ஏழு தீவுகளை ஒன்றிணைத்து கட்டப்பட்ட நகரம் அது. தாழ்வான பகுதிகளையும் இடையிலிருந்த பகுதிகளையும் மண்ணை இட்டு நிரப்பினர். அப்பகுதிகளில் பல மாடிக் கட்டடங்களை பின்னர் கட்டியெழுப்பி நிலத்தின் பிடிப்புத்தன்மையை உறுதி செய்திருக்கின்றனர். நகரத்தின் பெரும்பாலான பகுதி கடல்மட்டத்திலிருந்து சில அடிகள் உயரத்தில்தான் இருக்கிறது. கொஞ்சம் அலை அதிகரித்தாலும் போதும் கடல் மட்டம் நகரத்தின் மட்டத்திலிருந்து ஒரு அடி அளவு மட்டுமே வித்தியாசம் கொண்டிருக்கும் அளவுக்கு உயர்ந்துவிடும்.

2005ம் ஆண்டு நேர்ந்த வெள்ளம் மும்பைக்கு காலநிலை மாற்றத்தை முதலில் அறிவித்தது. கிட்டத்தட்ட 1000 பேர் பலியாயினர். தொடர்ந்து காலநிலை மாற்றத்தின் கோரத்தை அந்நகரம் சந்தித்து வருகிறது. 2017ம் ஆண்டில் நேர்ந்த வெள்ளச்சேதம் கூட உதாரணம். கடந்த சில வருடங்களில் மட்டும் கடுமையான மழைப்பொழிவை இந்தியா சந்தித்திருக்கிறது.

“மத்தி மீன்கள் அழிவதால் பேராபத்தை எதிர்கொள்ளும் மனித குலம்” : காலநிலை மாற்றம் நமக்கு சொல்லும் பாடம் என்ன?

மும்பை, கொச்சி, சென்னை, கொல்கத்தா போன்ற முக்கிய நகரங்கள் கடலோரங்களில் இருக்கின்றன. ஒரு சூழலை மட்டும் யோசித்துப் பாருங்கள். பெரும்புயல் நேர்ந்து கடுமையான மழையை இந்த கடலோர நகரங்கள் சந்தித்துக் கொண்டிருக்கும்போது, அதிக அலைகள் கடலில் இருந்தால் என்ன ஆகும்?

மழை நீரும் கடலுக்குள் சென்று கலங்க முடியாமல் நகரத்திலேயே தேங்கும். உதாரணமாக 2015ம் ஆண்டு சென்னை மழை! அம்மாதிரியான சூழல்களில் சில மில்லிமீட்டர் கடல் மட்ட உயர்வு கூட பெரும் சேதத்தை விளைவிக்கவல்லது. கடலோரத்தை கடல் விழுங்கும் வாய்ப்பைக் கொடுக்கக் கூடியது.

புயலையே பார்க்காத அரபிக் கடல் புயல்களை உருவாக்குவதும் அளவுகடந்த மழையும் கடல் மட்டங்கள் உயர்வதும் இந்திய நாட்டில் பெரும் பிரச்சினைகள் கொடுத்துக் கொண்டிருக்கின்றன. இந்திய அறிவியலாளர்களை பொறுத்தவரை கடல் மட்ட உயர்வு 7500 கிலோமீட்டர் நீளக் கடலோரத்தில் எவ்வளவு என்பதற்கான சரியான தகவல்கள் அரசிடம் இல்லை என கைவிரிக்கிறார்கள்.

மத்தி, கானாங்கெளுத்தி மீன்களுக்கும் நமக்கும் இடையே ஒரே ஒரு வித்தியாசத்தை மட்டும்தான் தற்போது இயற்கை வழங்கியிருக்கிறது. அழிவுக்கான காரணம் மீன்களுக்கு தெரியாது. நமக்கு தெரியும்!

banner

Related Stories

Related Stories