தமிழ்நாடு

அ.தி.மு.க ஆட்சியில் வேலை வாங்கித் தருவதாக மோசடி.. பணத்தை திருப்பி தராததால் வாலிபர் தீக்குளித்து தற்கொலை!

வேலை வாங்கி தருவதாகப் பண மோசடி செய்த ரியல் எஸ்டேட் அதிபரின் வீட்டின் முன்பு வாலிபர் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அ.தி.மு.க ஆட்சியில் வேலை வாங்கித் தருவதாக மோசடி.. பணத்தை திருப்பி தராததால் வாலிபர் தீக்குளித்து தற்கொலை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

திண்டுக்கல்லைப் பூர்வீகமாகக் கொண்டவர் பழனிக்குமார். இவர் தற்போது சென்னை சூளைமேடு பகுதியில் வசித்து வருகிறார். ஓய்வுபெற்ற அரசுப் பள்ளி ஆசிரியரான இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.

இந்நிலையில் இன்று காலை பழனிக்குமார் வீட்டிற்கு வாலிபர் ஒருவர் வந்து 10 லட்சம் ரூபாய் பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டார். அப்போது திடீரென அவர் தான் கொண்டு வந்த பெட்ரோலை உடலில் ஊற்றிக்கொண்டு தீ வைத்துக்கொண்டார்.

இதனால் பதட்டமடைந்த பழனிக்குமார் மற்றும் அருகே இருந்தவர்கள் அவர் மீது இருந்த தீயை அணைத்து சிகிச்சைக்காக கீழ்pபாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த சூளைமேடு போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்துகொண்ட நபர் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் எனத் தெரியவந்தது.

மேலும் அ.தி.மு.க ஆட்சியின்போது கடந்த 2019ஆம் ஆண்டு மின்சார வாரியத்தில் உதவி செயற் பொறியாளர் பணி வாங்கித் தருவதாகக் கூறி 23 லட்சம் ரூபாய் பாலகிருஷ்ணனிடம் இருந்து பழனிக்குமார் பெற்றுள்ளார். ஆனால் பழனிக்குமார் வேலை வாங்கித் தரவில்லை.

இதனால் இருவருக்கும் பலமுறை தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பழனிக்குமார் ரூ.13 லட்சத்தை மட்டும் திருப்பிக் கொடுத்துள்ளார். மீதி பணத்தை பிறகு தருவதாக தெரிவித்துள்ளார். பின்னர் 10 லட்சத்திற்கு பழனிக்குமார்காசோலை கொடுத்துள்ளார். இதை வாங்கிக் கொண்டு பாலகிருஷ்ணன் வங்கியில் செலுத்தியபோது, கணக்கில் பணமில்லை என திரும்பி வந்துள்ளது.

அ.தி.மு.க ஆட்சியில் வேலை வாங்கித் தருவதாக மோசடி.. பணத்தை திருப்பி தராததால் வாலிபர் தீக்குளித்து தற்கொலை!

இந்நிலையில் இன்று காலை மீதமுள்ள 10 லட்சம் பணத்தை கேட்டு பழனிக்குமாரின் வீட்டின் முன்பு வந்து பாலகிருஷ்ணன் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது மனமுடைந்த அவர் திடீரென தான் கொண்டுவந்த பெட்ரோலை தன்மீது ஊற்றிக் கொண்டு தீ வைத்து தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து சூளைமேடு போலிஸார் தற்கொலைக்கு தூண்டுதல் மற்றும் மோசடி உள்ளிட்ட 2 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து பழனிக்குமாரை கைது செய்தனர். மேலும் தலைமைச் செயலக மின்சார வாரிய அதிகாரிகளிடம் பணத்தைக் கொடுத்ததாக பழனிக்குமார் அளித்த தகவலின் அடிப்படையில் போலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories