தமிழ்நாடு

“தலையெடுக்கும் புதிய அரசியல் நாகரிகம்” : ஆர்.எம்.வீரப்பன் இல்லத்துக்கே சென்று வாழ்த்திய முதலமைச்சர்!

ஆர்.எம்.வீரப்பனின் பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரை நேரில் சென்று சந்தித்து வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

“தலையெடுக்கும் புதிய அரசியல் நாகரிகம்” : ஆர்.எம்.வீரப்பன் இல்லத்துக்கே சென்று வாழ்த்திய முதலமைச்சர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

மூத்த அரசியல் தலைவரும், அ.தி.மு.க முன்னாள் அமைச்சரும், எம்.ஜி.ஆர் கழகத் தலைவருமான ஆர்.எம்.வீரப்பனின் 95-வது பிறந்தநாளை முன்னிட்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று வாழ்த்துத் தெரிவித்தார்.

முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் ஆட்சிக் காலங்களில் அமைச்சராகப் பதவி வகித்தவர் ஆர்.எம்.வீரப்பன். மூத்த அரசியல் தலைவரான ஆர்.எம்.வீரப்பன் அனைத்துக் கட்சித் தலைவர்களுடனும் நட்பு பாராட்டி வருபவர்.

ஆர்.எம்.வீரப்பன் தனது 95-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு, சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது இல்லத்துக்கே நேரில் சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.

பிறந்தநாள் காணும் ஆர்.எம்.வீரப்பனுக்கும் அவருடைய மனைவிக்கும் பொன்னாடை அணிவித்து முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

“தலையெடுக்கும் புதிய அரசியல் நாகரிகம்” : ஆர்.எம்.வீரப்பன் இல்லத்துக்கே சென்று வாழ்த்திய முதலமைச்சர்!

இந்நிகழ்வின்போது, தி.மு.க பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி, அமைச்சர்கள் கே.என்.நேரு, க.பொன்முடி, ஜெகத்ரட்சகன் எம்.பி., உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

முன்னதாக, சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றிக்குப் பிறகும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மூத்த அரசியல் தலைவர்கள் என்.சங்கரய்யா, நல்லகண்ணு, ஆர்.எம்.வீரப்பன் ஆகியோரை அவர்களது இல்லத்திற்கே சென்று சந்தித்து வாழ்த்து பெற்றது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories