தமிழ்நாடு

“இனி குடிக்கவே மாட்டோம் என உறுதியளித்தால் ஜாமின்.. நீங்க தயாரா?” : மதுரை ஐகோர்ட் கிளை அதிரடி!

இனிமேல் குடிக்க மாட்டோம் என பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தால் ஜாமின் வழங்குவதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“இனி குடிக்கவே மாட்டோம் என உறுதியளித்தால் ஜாமின்.. நீங்க தயாரா?” : மதுரை ஐகோர்ட் கிளை அதிரடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

இனிமேல் குடிக்க மாட்டோம் என உறுதியளித்தால் ஜாமின் வழங்குவதாக மதுரை உயர்நீதிமன்றக் கிளை தெரிவித்துள்ளது.

திருச்சியைச் சேர்ந்த சிவா மற்றும் கார்த்திக் ஆகிய இருவரும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

அவர்களது மனுவில், ‛கடந்த ஜூலை 25ஆம் தேதி நண்பர்கள் சுரேஷ், பாண்டியன் உள்ளிட்டோருடன் சேர்ந்து மது அருந்திய போது, வாய்த் தகராறு ஏற்படவே, பாட்டிலால் சுரேஷை தாக்கியதாக எங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது பொய்யாக பதிவு செய்யப்பட்ட வழக்கு. கணக்கு காண்பிக்கும் நோக்கில் போலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 37 நாட்களுக்கும் மேலாக சிறையில் இருக்கும் நிலையில், கீழமை நீதிமன்றத்தில் ஜாமின் கோரிய வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

‛நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளுக்கு கட்டுப்படுகிறோம். ஆகவே, இந்த வழக்கில் ஜாமின் வழங்கி உத்தரவிட வேண்டும்,' என கூறியிருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி புகழேந்தி, “மது அருந்தியதன் காரணமாகவே இந்த பிரச்னை ஏற்பட்டுள்ளது. ஆகவே, மனுதாரர்கள் இருவரும் இனிமேல் குடிக்க மாட்டோம் என பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தால் ஜாமின் வழங்கப்படும்” எனக் கூறி வழக்கு விசாரணையை செப்.,13ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இனிமேல் குடிக்க மாட்டோம் என பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தால் ஜாமின் வழங்குவதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories