தமிழ்நாடு

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை : தஞ்சாவூர் வாலிபர் கைது.. நடந்தது என்ன?

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலிஸார் கைது செய்தனர்.

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை : தஞ்சாவூர் வாலிபர் கைது.. நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தஞ்சாவூர் மாவட்டம், வல்லம் பகுதியைச் சேர்ந்த முதியவர் ஊருக்கு வெளியே வீடுகட்டி வசித்து வருகிறார். இவரது மூத்த மகள் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர்.

முதியவர் தினந்தோறும் தான் வளர்த்து வரும் கால்நடைகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்வது வழக்கம். அப்போது தனது மகளையும் உடன் அழைத்துச் செல்வார். இப்படி நேற்று இவர்கள் மேய்ச்சலுக்குச் சென்றுள்ளனர்.

அப்போது, முதியவர் தனது மகளை ஒரு இடத்தில் உட்காரவைத்துவிட்டு கொஞ்சம் தள்ளிச் சென்று கால்நடை மேய்ச்சலில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு வந்த கோவிந்தராஜ் என்பவர் அப்பெண்ணை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதனால் அச்சமடைந்த அவர் சத்தம் போட்டுள்ளார். மகளின் சத்தம் கேட்டு முதியவர் அங்கு வந்துள்ளார். அதற்குள் கோவிந்தராஜ் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். இதுகுறித்து வல்லம் காவல்நிலையத்தில் முதியவர் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக இருந்த கோவிந்தராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

banner

Related Stories

Related Stories