தமிழ்நாடு

செந்தில் காமெடியை மிஞ்சிய டிக்டாக் பிரபலம் : தற்கொலை வீடியோ வெளியிட்டு குறட்டை விட்டுத் தூங்கிய கூத்து!

தற்கொலை செய்து கொள்வதாக போலிஸாருக்கு வீடியோ வெளியிட்டு, பிறகு குறட்டை விட்டுத் தூங்கிய சம்பவம் திருச்சியில் அரங்கேறியுள்ளது.

செந்தில் காமெடியை மிஞ்சிய டிக்டாக் பிரபலம் : தற்கொலை வீடியோ வெளியிட்டு குறட்டை விட்டுத் தூங்கிய கூத்து!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

திருச்சி மாவட்டம், மணப்பாறை பகுதியைச் சேர்ந்தவர் சூர்யாதேவி. இவர் சினிமா நடிகர்கள், டிக்டாக் பிரபலங்களை விமர்சித்து சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டு, இதன் மூலம் தன்னையும் பிரபலப்படுத்திக்கொள்ள முயல்வார்.

சமீபத்தில் நடிகை வனிதாவை திட்டி வீடியோ வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தினார். இதையடுத்து திருச்சியைச் சேர்ந்த ரவுடி பேபி சூர்யா என்பவரின் நண்பரை செருப்பால் அடித்து அதையும் வீடியோவாக வெளியிட்டிருந்தார்.

இதுகுறித்து மதுரை போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், நேற்று மதுரை போலிஸ் கமிஷனருக்கு வீடியோ ஒன்று வந்துள்ளது. அதில் சூர்யாதேவி தான் தற்கொலை செய்துகொள்ளப் போவதாகதெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மதுரை கமிஷனர் உடனடியாக மணப்பாறை போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார். பின்னர் போலிஸார் இரவு சூர்யாதேவியின் வீட்டிற்குச் சென்று பார்த்தனர். நீண்டநேரம் அவரது வீட்டுக் கதவைத் தட்டியும் திறக்காததால் போலிஸார் அதிர்ச்சியடைந்து தீயணைப்புத் துறைக்குத் தகவல் கொடுத்தனர்.

பிறகு, தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டில் இருந்த மின் விசிறியில் வேஷ்டி ஒன்றை தூக்கு மாட்டிக்கொள்வதுபோல் வைத்துவிட்டு, போலிஸார் வந்தது கூட தெரியாமல் குறட்டைவிட்டுத் தூங்கிக் கொண்டிருந்துள்ளார் சூர்யாதேவி.

பின்னர் அவரை போலிஸார் எழுப்பி, வீடியோ குறித்து விளக்கம் கேட்டனர். பின்னr அவருக்கு அறிவுரை வழங்கிவிட்டு போலிஸார் 'என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா' என மனதில் நினைத்துக் கொண்டே அங்கிருந்து சென்றுள்ளனர்.

banner

Related Stories

Related Stories