தமிழ்நாடு

நுங்கு விற்ற கலைமாமணி.. முதல்வர் அறிவுறுத்தலுக்கிணங்க வில்லிசைக் கலைஞருக்கு ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை!

வில்லிசைக் கலைஞர் கலைமாமணி மேலக்கரந்தை குருசாமித்தேவருக்கு ஓய்வூதியம் வழங்க, இயல், இசை, நாடக மன்றத்தலைவர் வாகை சந்திரசேகர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

நுங்கு விற்ற கலைமாமணி.. முதல்வர் அறிவுறுத்தலுக்கிணங்க வில்லிசைக் கலைஞருக்கு  ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலுக்கிணங்க, வில்லிசைக் கலைஞர் கலைமாமணி மேலக்கரந்தை குருசாமித் தேவருக்கு ஓய்வூதியம் வழங்க, இயல், இசை, நாடக மன்றத்தலைவர் வாகை சந்திரசேகர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

இது பற்றிய விவரம் வருமாறு:- தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள மேலகரந்தை என்ற ஊரைச் சேர்ந்தவர் வில்லிசைக் கலைஞர் குருசாமி. 88 வயதான அவர், அரசு வழங்கும் கலைஞர்களுக்கான ஓய்வுதியத்திற்கு மனு விண்ணப்பித்து பல வருடம் ஆகியும் கிடைக்கவில்லை.

அவர் தள்ளாத வயதில் நுங்கு வெட்டி எடுத்து ஓலைப்பெட்டியில் போட்டுக் கொண்டு சுமார் 20 மைல் சுற்றளவிற்கு சென்று விற்பனை செய்து வருகிறார். இவர் 1997ல் தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றவர்.

இந்தச் செய்தியை அறிந்த தமிழக முதல்வரின் அறிவுறுத்தலுக்கு இணங்க பத்திரிக்கைகளில் செய்தி வந்த மூன்று நாட்களில் இயல், இசை நாடக மன்ற தலைவர் வாகை சந்திர சேகர் உடனடியாக அவரை நேரில் அழைத்து அதிகாரிகளோடு தொடர்பு கொண்டு விரைவில் ஓய்வூதியம் கிடைக்க நடவடிக்கை எடுத்தார். வில்லிசைக் கலைஞர் குருசாமி, அவரது மகன் சேகர், செயலாளர் தி.சோமசுந்தரம் ஆகியோர் படத்தில் உள்ளனர்.

banner

Related Stories

Related Stories