தமிழ்நாடு

பிரபலங்கள் பெயரில் போலி அக்கவுண்ட்.. அவசர உதவி என கைவரிசை காட்டும் முகநூல் மோசடி கும்பல்!

முகநூலில் பிரமலானவர்களின் பட்டியலை தயாரித்து, அவரது பக்கங்களை தொடர்ச்சியாக ஹேக் செய்து மோசடியில் ஈடுபட்டு வரும் சம்பவம் அதிகரித்துள்ளது.

பிரபலங்கள்  பெயரில் போலி அக்கவுண்ட்.. அவசர உதவி என கைவரிசை காட்டும் முகநூல் மோசடி கும்பல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சமூக வலைதளங்களைப் பயன்படுத்தி நடைபெறும் சைபர் குற்றங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக, ஆன்லைன் டெலிவரி தொடங்கி முகநூல் கணக்கு வரை சைபர் கிரைம் குற்றவாளிகள் தங்கள் கைவரிசையை காட்டிவருகின்றனர்.

அந்தவரிசையில், முகநூலில் பிரமலானவர்களின் பட்டியலை தயாரித்து, அவரது பக்கங்களை தொடர்ச்சியாக ஹேக் செய்து மோசடியில் ஈடுபட்டு வரும் சம்பவம் அதிகரித்துள்ளது. முகநூலில் பிரமலானவர்களின் பட்டியலை தயாரித்து, அவரது பக்கங்களை தொடர்ச்சியாக ஹேக் செய்துள்ளனர்.

அதேபோல், போலியான முகநூல் பக்கத்தை தொடங்கி, நண்பர் ஒருவருக்கு அறுவைச் சிகிச்சை உள்ளது. எனவே தனக்கு அவசரமாக பணத்தேவை உள்ளது என தனிப்பட்ட முறையில் ஒவ்வொரு முகநூல் நண்பர்களை குறிவைத்து இந்த பண மோசடி சம்பவம் நடைபெற்று வருகிறது.

முகநூல் பக்கத்தில் தனது நண்பரின் பணத்தேவையை அறிந்து உதவி செய்யும் முகநூல் நண்பர்களில் யாராவது ஒருவர் உஷாராகி சம்பந்தப்பட்டவரை தொடர்பு கொள்ளும்போதுதான் அந்த பிரபலத்துக்கு தனது பெயரில் முகநூல் பக்கம் தொடங்கி பணம் பறிக்கும் மோசடி கும்பல் பற்றி தெரிய வருகிறது.

பிரபலங்கள்  பெயரில் போலி அக்கவுண்ட்.. அவசர உதவி என கைவரிசை காட்டும் முகநூல் மோசடி கும்பல்!

உடனடியாக அவர் தனது முகநூல் நண்பர்களுக்கு முகநூல் வழியாகவே, தனது பெயரில் யாராவது பணம் கேட்டால் தர வேண்டாம் என்று தகவலை பதிவு செய்கிறார். ஆனாலும் அதுவரை பறிக்கப்பட்ட பணத்தின் நிலை கேள்விக்குறியே.

தமிழ்நாட்டில் பல கோடி ரூபாய் பணம் மோசடி பேர்வழிகளால் பணப்பறிப்பு நடந்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே பொதுமக்களும் முகநூலில் கணக்கு வைத்துள்ளவர்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் எனக் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories