தமிழ்நாடு

பாதுகாப்பின்றி கண்ணாடி துண்டுகளை ஏற்றிச்சென்ற லாரி : மடக்கிப் பிடித்து போலிஸிடம் ஒப்படைத்த தி.மு.க MP!

பாதுகாப்பின்றி கண்ணாடித் துகள்களை ஏற்றிச் சென்ற லாரியை மடக்கிப் பிடித்து காவல்துறையிடம் தி.மு.க எம்.பி கதிர் ஆனந்த் ஒப்படைத்தார்.

பாதுகாப்பின்றி கண்ணாடி துண்டுகளை ஏற்றிச்சென்ற லாரி : மடக்கிப் பிடித்து போலிஸிடம் ஒப்படைத்த தி.மு.க MP!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

வேலூர் தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் கதிர்ஆனந்த் இன்று தனது காரில் சென்னைக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது, கதிர் ஆனந்த் காருக்கு முன்பு லாரி ஒன்று வேகமாகச் சென்றுகொண்டிருந்தது. இதையடுத்து லாரியில் இருந்து உடைந்த கண்ணாடி துண்டுகள் சாலையில் கொட்டியபடியே சென்றுகொண்டிருந்தது.

இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர். இதை அறிந்த தி.மு.க எம்.பி கதிர்ஆனந்த், லாரியை விரட்டிச் சென்று மடக்கினார். பின்னர் லாரியில் பார்த்தபோது, பாதுகாப்பற்ற முறையில் உடைந்த கண்ணாடி துகள்கள் மூடப்படாமல் இருந்துள்ளன.

இதைக்கண்ட கதிர்ஆனந்த் அதிர்ச்சியடைந்தார். பிறகு லாரி ஓட்டுநரிடம் இதுகுறித்து விசாரணை நடத்தினார். மேலும் பாதுகாப்பாக கண்ணாடி துகள்களை எடுத்து வரக்கூடாதா எனக் கண்டித்தார். பின்னர் லாரியை சத்துவாச்சாரி காவல்நிலையத்தில் ஒப்படைத்தார். கதிர் ஆனந்தின் இந்த செயலுக்கு வாகன ஓட்டிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories