தமிழ்நாடு

சொத்துக்காக இப்படியா... குடும்பமாகச் சேர்ந்து முதியவரை அடித்துக் கொடுமை: தூத்துக்குடியில் பயங்கரம்!

தூத்துக்குடியில் சொத்துக்காக முதியவரை குடும்பமே சேர்ந்து துன்புறுத்தும் சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சொத்துக்காக இப்படியா...  குடும்பமாகச் சேர்ந்து முதியவரை அடித்துக் கொடுமை: தூத்துக்குடியில் பயங்கரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் ராமானுஜம் பகுதியைச் சேர்ந்தவர் ராமய்யா. முதியவரான இவரது மனைவி கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார்.

இதையடுத்து ராமய்யா தனது மகன்களுடன் வசித்து வருகிறார். இவரிடம் இருந்த ரூ.5 லட்சத்தை மகன் மற்றும் பேரன், மருமகள் ஆகியோர் வற்புறுத்தி வாங்கிக் கொண்டனர். மேலும் இவர் பெயரில் இருக்கும் சொத்துக்களை எழுதிக்கொடுக்குமாறு குடும்பமாகச் சேர்ந்து ராமய்யாவை அடித்துத் துன்புறுத்தி வருகிறார்கள்.

குடும்பத்தினரின் இந்த கொடுமையைத் தாங்க முடியாமல் மனமுடைந்த முதியவர் ராமய்யா தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், "தன்னை அடித்து கொடுமைப்படுத்தி வரும் மகன், பேரன், மருமகள் மீது முதியோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.

முதியவரை குடும்பமாகச் சேர்ந்து அடித்து கொடுமைப்படுத்திய சம்பவம் தூத்துக்குடியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories