தமிழ்நாடு

அனைத்து சாதியினரும் அர்ச்சகர்: வேலையை பறிக்கும் செயலா? தி.மு.க எம்பி கனிமொழி தக்க பதிலடி!

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் திட்டம் என்பது தொடர்பாக வெளிவரும் சர்ச்சை கருத்துகளுக்கு திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்பி தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

அனைத்து சாதியினரும் அர்ச்சகர்: வேலையை பறிக்கும் செயலா? தி.மு.க எம்பி கனிமொழி தக்க பதிலடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை தேனாம்பேட்டையில் அமைந்துள்ள அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க மகளிரணி சார்பில் தலைவர் கலைஞரின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு கல்லூரி மற்றும் பள்ளி பயிலக்கூடிய 20 மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகையை தி.மு.க மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. கலந்துகொண்டு வழங்கினார்.

தி.மு.க மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி மேடை பேச்சு,

கொரோனா நோய் தொற்று அதிகம் பரவிய நேரத்தில்தான் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராகப் பொறுப்பேற்று இரண்டாவது தோற்று பரவல் அலையை கட்டுக்குள் கொண்டு வந்தார். முத்தமிழ் அறிஞர் கலைஞர் பெண்கள் படிக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் திருமண உதவித்தொகை என்கின்ற திட்டத்தை கொண்டு வந்தார்.

குறிப்பாக அந்த திட்டத்தின் மூலம் பத்தாவது படித்து முடித்தால் மட்டுமே பெண்களுக்கு திருமண உதவி என்று கொண்டு வந்து பல பெண்களை படிக்கச் செய்தார். அந்த வரிசையில் தான் முதலமைச்சராக ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன் பெண்களுக்கு பேருந்துகளில் பயணம் இலவசம் என அறிவித்தவர்தான் நம் தளபதி. முன்பு பெண்களை வீட்டில் இருக்கச் சொல்லிவிட்டு ஆண்கள் வேலைக்கு செல்வது வழக்கமாக இருந்தது. ஆனால் தற்போது ஆண்களை வீட்டில் இருக்கச் சொல்லி பெண்கள் வேலைக்கு செல்லும் சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுத்தது தான் நமது திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி.

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பதை பெரியாரின் வழிவந்த நமது முதல்வர் தற்போது அதனை நிறைவேற்றி உள்ளார். குறிப்பாக அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என பணி நியமனம் முதல்வரால் வழங்கப்பட்டது பலர் சர்ச்சையாக பேசினர். ஆனால் அர்ச்சகர் பணிக்காக வழங்கிய பணி ஆணைகளை பெற்றவர்கள் அனைவரும் தகுதியானவர்கள் என்பதை விமர்சிப்பதற்கு முன் தெரிந்து கொள்ள வேண்டும். கு

றிப்பாக யாருக்கும் யாரும் குறைந்தவர்கள் இல்லை என்பதனை நிரூபிக்கும் வகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளார். அதுமட்டுமின்றி எல்லாருக்கும் வாய்ப்பை அளிக்கக் கூடிய வகையில் காலிப் பணியிடங்கள் ஆக உள்ள இடங்களை மட்டுமே தமிழக முதல்வர் நிரப்பியுள்ளார் என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.

banner

Related Stories

Related Stories