தமிழ்நாடு

“கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண்மை திட்டம் தொடங்கப்படும்”: இயற்கை வேளாண்மைக்கு வழிவகுக்கும் புதிய அறிவிப்பு!

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டம் தொடங்கப்படும் என வேளாண்மை பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளது.

“கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண்மை திட்டம் தொடங்கப்படும்”: இயற்கை வேளாண்மைக்கு வழிவகுக்கும் புதிய அறிவிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாட்டில் முதல் முறையாக வேளாண் துறைக்குத் தனி நிதிநிலை அறிக்கை சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. 273 பக்கங்கள் கொண்ட வேளாண் நிதி நிலை அறிக்கையை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறார்.

அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்ல்வம் தாக்கல் செய்து வரும் வேளாண் நிதி நிலை அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:- “தொலைநோக்கு பார்வையுடன் வேளாண் நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

பயிர் சாகுபடி பரப்பளவு 75% அதிகரிக்கப்படும். தற்போது 10 லட்சம் ஹெக்டர் உள்ள இருபோக சாகுபடி நிலங்கள் 20 லட்சம் ஹெக்டராக உயர்த்தப்படும்.

தமிழ்நாட்டில் நிகர சாகுபடி பரப்பான 60% என்பதை 75% உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். உணவு தன்னிறைவைத் தமிழ்நாடு ஓரளவு எட்டிவிட்டது. சிறுகுறு விவசாயிகளை ஒருங்கிணைந்து கூட்டுப்பண்ணை முறை ஊக்குவிக்கப்படும்.

பணப்பயிர்கள் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். பணப்பயிர்களுக்கான வேளாண் ஆக்கத்திறனில் முதல் மூன்று இடங்களுக்குள் தமிழ்நாடு இடம் பிடிக்கும்.

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டம் தொடங்கப்படும். இயற்கை வேளாண்மை விவசாயிகளுக்கு இடுபொருள் மானியம் வழங்கப்பட்டு ஊக்குவிக்கப்படும். வேளாண்மைத் துறையில் இயற்கை வேளாண்மை என்று தனிப்பிரிவு உருவாக்கப்படும்" என அமைச்சர் அறிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories