தமிழ்நாடு

மக்கள் துன்பத்தில் இருப்பதை உணர்ந்து பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கிறார் அமைச்சர் PTR - ப.சிதம்பரம் ட்வீட்

மக்கள் துன்பத்தில் இருப்பதை உணர்ந்து பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கிறார் அமைச்சர் PTR - ப.சிதம்பரம் ட்வீட்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முதல் மற்றும் 2021-22ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் இன்று தாக்கல் செய்தார்.

திமுக அரசின் நிதி நிலை அறிக்கையை பாராட்டி பல அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்பளித்துள்ளனர்.

அவ்வகையில் முன்னாள் ஒன்றிய நிதியமைச்சரும் காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் ட்விட்டரில் தமிழ்நாடு பட்ஜெட் குறித்து பதிவிட்டுள்ளதாவது,

“தமிழ்நாடு அரசின் 2021-22 ஆண்டு நிதி நிலை அறிக்கையைப் படித்தேன். 6 மாதங்களாக நடைமுறையில் உள்ள இடைக்கால நிதி நிலை அறிக்கையில் அவசியமான சில திருத்தங்களைச் செய்து எஞ்சியுள்ள 6 மாதங்களுக்கு அறிக்கையை நிதி அமைச்சர் தந்திருக்கிறார். இது சிக்கலான, சிரமமான பணி.

நிதி நிலை அறிக்கையில் தி மு கழகத்தின் சமுதாய நோக்கு அழுத்தமாகப் பதிந்திருக்கிறது, இது பாராட்டுக்குரியது. தேர்தல் வாக்குறுதிகளைப் படிப்படியாக நிறைவேற்றும் முதலமைச்சரின் உறுதியை வரவேற்கிறேன். பெட்ரோல் மீதான வரியில் ரூ 3 ஐக் குறைத்திருப்பது ஓர் உதாரணம்.

பல மக்கள் நலத்திட்டங்கள் புத்துயிர் பெற்றிருப்பதையும் வரவேற்கிறேன். பெருந்தொற்றின் தாக்கத்தில் மக்கள் இன்னும் துன்பத்தில் இருப்பதை உணர்ந்து நிதி நிலை அறிக்கையை நிதி அமைச்சர் அளித்திருக்கிறார். இன்னும் 6 மாதத்தில் தரவிருக்கும் 2022-23 ஆண்டின் நிதி நிலை அறிக்கையில் பல முன்னேற்றம் மற்றும் வளர்ச்சித் திட்டங்களை நம்பிக்கையுடன் எதிர்பார்க்கலாம்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories