தமிழ்நாடு

ஒலிம்பிக் வெற்றியை இப்படியும் கொண்டாடலாம்.. மக்களுக்கு 1 டன் தக்காளியை இலவசமாக வழங்கிய இஸ்லாமிய வியாபாரி!

ஒலிம்பிக்கில் இந்திய வீரர்கள் பதக்கம் வென்றதை கொண்டாடும் விதமாக வியாபாரி ஒருவர் பொதுமக்களுக்கு இலவசமாகத் தக்காளியை வழங்கினார்.

ஒலிம்பிக் வெற்றியை இப்படியும் கொண்டாடலாம்.. மக்களுக்கு 1 டன் தக்காளியை இலவசமாக வழங்கிய இஸ்லாமிய வியாபாரி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வந்த 32வது ஒலிம்பிக் போட்டி நேற்றுடன் நிறைவடைந்தது. இந்த ஒலிம்பிக்கில் 39 தங்கப்பதக்கத்துடன் மொத்தம் 113 பதக்கங்கள் வென்று அமெரிக்கா முதலிடம் பிடித்துள்ளது.

சீனா 88 பதக்கத்துடன் இரண்டாவது இடத்தையும், ஒலிம்பிக் தொடரை நடத்திய ஜப்பான் 58 பதக்கத்துடன் மூன்றாவது இடத்தையும் பிடித்தது. இந்தியா ஒரு தங்கத்துடன் மொத்தம் 7 பதக்கங்களைப் பெற்று 48வது இடத்தை பிடித்துள்ளது.

ஒலிம்பிக் வரலாற்றிலேயே டோக்கியோவில் பெற்ற பதக்கம் தான் அதிகம். மேலும் தடகளத்தில் 120 ஆண்டுகள் கழித்து இந்தியா தனிநபர் பிரிவில் தங்கம் வென்று வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளது. இந்த சாதனையைப் படைத்த நீரஜ் சோப்ராவுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

இந்தியாவின் ஒலிம்பிக் தங்கப் பதக்க வெற்றியைக் கொண்டாடும் விதமாகத் திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியைச் சேர்ந்த காய்கறி கடை நடத்தி வரும் சேட்டான் என்பவர் பொதுமக்களுக்கு தலா இரண்டு கிலோ தக்காளியை இலவசமாக வழங்கி தனது மகிழ்ச்சியை மக்களுடன் பகிர்ந்து கொண்டார். இப்படி சுமார் 500 பேருக்கு ஒரு டன் தக்காளியை இலவசமாகக் கொடுத்துள்ளார்.

banner

Related Stories

Related Stories