தமிழ்நாடு

ஒரே கோயிலை குறிவைத்து ‘சனிக்கிழமைகளில் மட்டும்’ திருடும் நூதன கொள்ளையன்... போலிஸ் வலைவீச்சு!

ஒரே கோயிலைக் குறிவைத்து சனிக்கிழமையன்று திருடி வரும் கொள்ளையனை போலிஸார் தேடி வருகின்றனர்.

ஒரே கோயிலை குறிவைத்து ‘சனிக்கிழமைகளில் மட்டும்’ திருடும் நூதன கொள்ளையன்... போலிஸ் வலைவீச்சு!
Admin
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

சென்னை பெருங்களத்தூர் அருகே ஒரே கோயிலைக் குறிவைத்து தொடர்ந்து திருடி வரும் கொள்ளையனை போலிஸார் தேடி வருகின்றனர்.

சென்னை பெருங்களத்தூர் அருகே உள்ள பீர்க்கன்கரணை பகுதியில் செல்வ விநாயகர் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் உண்டியலில் 4 மாதங்களுக்கு முன்பு கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

பின்னர் அடிக்கடி கோயில் உண்டியலில் பணம் காணாமல் போவது தெரியவந்துள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் போலிஸில் புகார் அளித்ததுடன், கோயிலில் சி.சி.டி.வி கேமராவையும் பொருத்தியுள்ளனர். ஆனாலும் மீண்டும் பணம் திருட்டு போயுள்ளது.

இதையடுத்து, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் திருடன் ஒருவன் சனிக்கிழமைகளில் மட்டும் நள்ளிரவில் கோயிலுக்குள் நுழைந்து, தாமிரக் கம்பியில் சூயிங் கம் வைத்து உண்டியலில் விட்டு பணத்தைத் திருடுவது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமையன்று பொதுமக்கள் மறைந்திருந்து திருடனைப் பிடிக்க முயன்ற நிலையில் அவன் தப்பியோடியுள்ளான். இந்த திருட்டுச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலிஸார் சனிக்கிழமை திருடனை தேடி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories