தமிழ்நாடு

"அதிமுக ஆட்சியில் நடந்த ஊழல்களை விசாரிக்க தனிப்பிரிவு அமைப்பு": அமைச்சர் பி.மூர்த்தி தகவல்!

அதிமுக ஆட்சியல் நடந்த அனைத்து ஊழல்களையும் விசாரிக்க தனிப்பிரிவு அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்துள்ளார்.

"அதிமுக ஆட்சியில் நடந்த ஊழல்களை விசாரிக்க தனிப்பிரிவு அமைப்பு": அமைச்சர் பி.மூர்த்தி தகவல்!
Kalaignar TV
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மதுரை கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட வண்டியூர் உள்ளிட்ட பகுதியில் தமிழ்நாடு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பி.மூர்த்தி,"தமிழ்நாடு அரசின் சார்பில் கொரோனா மூன்றாம் அலையைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் முதலமைச்சர் தொடங்கி வைத்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து மதுரை மாவட்டத்தில் நகர்ப்புறங்களிலும், கிராமப்புறங்களிலும் வாகனம் மூலமாக விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மதுரை மாவட்ட நிர்வாகம் கொரோனாவை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்கிறது.

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பெரியார் பேருந்து நிலைய கட்டுமானப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர் ஆகியோர் பணிகளை விரைந்து முடிப்பதாக உறுதியளித்துள்ளனர்.

அதிமுக ஆட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதிமுக ஆட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மட்டுமல்ல அனைத்துத் துறைகளிலும் ஊழல் நடந்துள்ளது. அதனை விசாரிக்கத் தனிப்பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.

அதிமுக ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளில் பத்திரப் பதிவுத்துறையில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படவில்லை. திமுக ஆட்சியில் சில சீர்திருத்தப் பணிகளை மேற்கொள்ளும்போது, தவறு செய்யும் அதிகாரிகள் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்படுகின்றனர், சில அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்படுகின்றனர்" என தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories