தமிழ்நாடு

"ராஜேந்திர பாலாஜியால் ஆவின் பாலகத்திற்கு ரூ. 4.20 கோடி நஷ்டம்" : பால் உற்பத்தியாளர்கள் குற்றச்சாட்டு!

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் நடவடிக்கையால் திண்டுக்கல் ஆவின் பாலகத்திற்கு ரூபாய் 4.20 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகப் பால் உற்பத்தியாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

"ராஜேந்திர பாலாஜியால் ஆவின் பாலகத்திற்கு ரூ. 4.20 கோடி நஷ்டம்" : பால் உற்பத்தியாளர்கள் குற்றச்சாட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, கடந்த ஆட்சியில் ஆவின் ஊழியர்கள் நியமனத்தில் முறைகேடு செய்துள்ளதாகவும், தீபாவளி பண்டிகையின்போது ஒரு டன் அளவுக்கு ஆவின் இனிப்புகளைத் தனது வீட்டிற்கு எடுத்துச் சென்றதாகவும் அண்மையில் அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் முறைகேடான நடவடிக்கையால் திண்டுக்கல் ஆவின் பாலகத்திற்கு 4.20 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகப் பால் உற்பத்தியாளர்கள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

இது குறித்து பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் பொருளாளர் சங்கர், " திண்டுக்கல் மாவட்டத்தில் ஏழு வழித்தடங்களில் ஏழு முகவர்கள் நியமிக்கப்பட்டிருந்தார்கள். ஆனால் அ.தி.மு.க ஆட்சியின் போது ஏழு வழித்தடங்களுக்கும் ஒரே முகவர் நியமிக்கப்பட்டார்.

மேலும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் நடவடிக்கையால் திண்டுக்கல் மாவட்டத்தில் ஆவின் பாலகத்திற்கு 4.20 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories