தமிழ்நாடு

நண்பனைக் கொன்ற ரவுடியை கொல்ல நாட்டு வெடிகுண்டு தயாரித்த இளைஞர்கள்; போலிஸிடம் சிக்கியது எப்படி?

நண்பனைக் கொன்ற ரவுடியை கொல்ல நாட்டு வெடிகுண்டு தயாரித்த இளைஞர்கள்; போலிஸிடம் சிக்கியது எப்படி?
DELL
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நண்பரை கொலை செய்த பிரபல ரவுடியை பழிக்குப் பழி வாங்க நாட்டு வெடி குண்டுகளை தயாரித்து கொலை செய்யத் திட்டம் தீட்டிய இளைஞர்கள்; போலீசாரிடம் சிக்கியது எப்படி?

செங்கல்பட்டு மாவட்டம் ஒரகடம்-திருகச்சூர் செல்லும் சாலையில் மறைமலைநகர் காவல் ஆய்வாளர் ராஜாங்கம் மற்றும் குற்றப்பிரிவு ஆய்வாளர் தனசேகரன் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது பல்சர் பைக்கில் வந்த 3 இளைஞர்களிடம் காவல் ஆய்வாளர் ராஜாங்கம் விசாரணை நடத்திய போது பிடிபட்ட இளைஞர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் சந்தேகம் அடைந்த காவலர்கள் அவர்களிடம் சோதனை நடத்தினர்.

நண்பனைக் கொன்ற ரவுடியை கொல்ல நாட்டு வெடிகுண்டு தயாரித்த இளைஞர்கள்; போலிஸிடம் சிக்கியது எப்படி?
DELL

சோதனையின் போது பைக்கில் மறைத்து வைத்திருந்து 2 நாட்டு வெடி குண்டுகளை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதனையடுத்து அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அவர்களிடம் அன்பாக விசாரணை செய்தபோது காவல்துறையினருக்கு பல அதிர்ச்சி தகவல் காத்திருந்தது.

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூரில் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு தனசேகர் என்ற ரவுடிக்கும் பூச்சி இரத்தினசபாபதி என்பவருக்கும் ஏற்பட்ட கஞ்சா விற்பனை போட்டியில் பூச்சி ரத்தினசபாபதி என்பவர் தனசேகரனை ஓட ஓட விரட்டி தலையை துண்டித்து நடுரோட்டில் வீசியுள்ளார்,

இதனைப் பொறுக்க முடியாத அவரது கூட்டாளியான கிஷோர் (20) பூச்சி ரத்தினசபாபதியை பழிக்கு பழியாக கொலை செய்ய பல வருடங்களாக காத்திருந்து, ஒரு திட்டத்தைத் தீட்டி நாட்டு வெடிகுண்டு தயாரிக்கும் அழகேசன் என்பவரிடம் ஒன்றிணைந்து பூச்சி ரத்தினசபாபதி தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டி இரண்டு நாட்டு வெடிகுண்டுகளுடன் கிஷோர், அழகேசன் மற்றும் அவரது நண்பரான சிவக்குமாருடன் இரண்டு நாட்டு வெடிகுண்டு மற்றும் அரிவாள்ளுடன் சென்ற போது கையும் களவுமாக போலீசாரிடம் சிக்கியுள்ளனர். வெடிகுண்டுகளுடன் சிக்கிய 3 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நீதிபதி முன் ஆஜர் படுத்திய போலீசார் சிறையில் அடைத்தனர்.

banner

Related Stories

Related Stories