தமிழ்நாடு

பா.ம.க தலைவர் ராமதாசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

பா.ம.க நிறுவனத் தலைவர் மருத்துவர் ராமதாசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பா.ம.க தலைவர் ராமதாசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பா.ம.க நிறுவனத் தலைவர் மருத்துவர் ராமதாசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (25.7.2021) "பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் மருத்துவர் அய்யா ச.இராமதாசு அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!

இட ஒதுக்கீடு உள்ளிட்ட அரசியல் உரிமைகளுக்காகப் போராடியும் வாதாடியும் வரும் அவர் நீண்ட காலம் நலமுடன் வாழ வாழ்த்துகிறேன்!" என்று டிவிட்டர் மூலம் வாழ்த்துத் தெரிவித்தார்கள்.

மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் மருத்துவர் அய்யா ச.இராமதாசு அவர்களைத் தொலைபேசியில் தொடர்புகொண்டும் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார்கள்.

பா.ம.க தலைவர் மருத்துவர் ராமதாசுக்கு பிரதமர் நரேந்திர மோடி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories