தமிழ்நாடு

“த.வெ.க-வின் Vulgar Warriors குறித்தும் விஜய் வாயே திறப்பதில்லை” : மேயர் பிரியா கண்டனம்!

தனக்கு எதிராக அவதூறு வீடியோ வெளியிட்டுள்ளவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பேன் என மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.

“த.வெ.க-வின் Vulgar Warriors குறித்தும் விஜய் வாயே திறப்பதில்லை” : மேயர் பிரியா கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

த.வெ.க ஆட்சியில் பெண்கள் மீதான வன்முறைச் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகக் கூறி, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா கடுமையாகக் கேள்விகளை எழுப்பித் த.வெ.க அரசைச் சாடி வருகிறார்.

இதனால், த.வெ.க-வினர் சமூக வலைதளங்களில் அவருக்கு எதிராக ஆபாசமான கருத்துகளைப் பதிவிட்டு, இழிவான செயலில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்துப் புகார் அளித்தும் காவல்துறை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வருகிறது.

தற்போது மீண்டும் த.வெ.க-வின் Vulgar Warriors வக்கிரமான வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள். இதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனங்களைப் பதிவு செய்து வருகிறார்கள்.

இந்நிலையில், தமிழ்நாட்டுப் பெண்களுக்கெல்லாம் தானே பாதுகாப்பு என்று வசனம் பேசிவரும் முதலமைச்சர் ஜோசப் விஜய் இது குறித்து(ம்) வாயே திறப்பதில்லை என மேயர் பிரியா விமர்சித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில் ” இன்று ஒரு காணொளியில் என்னை AI மூலம் வக்கிரமாகச் சித்தரித்து தவெகவின் Vulgar Warriors பரப்பிக்கொண்டிருக்கின்றனர். இது முதன்முறை அல்ல. தொடர்ச்சியாக பலமுறை என்னைக்குறித்து இதுபோன்ற இணையத் தாக்குதல்களில் ஈடுபட்டுவருகின்றனர். தமிழ்நாட்டுப் பெண்களுக்கெல்லாம் தானே பாதுகாப்பு என்று வசனம் பேசிவரும் முதலமைச்சர் ஜோசப் விஜய் இது குறித்து(ம்) வாயே திறப்பதில்லை.

அரசியல், பதவி என்பதையெல்லாம் தாண்டி ஒரு பெண்ணாக, ஒரு தாயாக, ஒரு குடும்பத்தின் மகளாக இது போன்ற கேவலமான தாக்குதல்கள் தனிப்பட்ட முறையில் எனக்கு மிகுந்த வேதனையையும், மன உளைச்சலையும் உண்டாக்குகின்றன.

இந்த Targeted abuse-ஐச் செய்வது த.வெ.க தலைமையின் நேரடித் தொடர்பில் இருக்கும் ஒரு கும்பல், இவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பேன்" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories