தமிழ்நாடு

“இலட்சியப் பாதையில் முன்னேறு” : இளைஞரணிச் செயலாளர் உதயநிதிக்கு கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

தி.மு.க. இளைஞரணிச் செயலாளர் உதயநிதிக்கு, கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“இலட்சியப் பாதையில் முன்னேறு” : இளைஞரணிச் செயலாளர் உதயநிதிக்கு கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தி.மு.க. இளைஞரணிச் செயலாளரும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் இன்று தனது 50-ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

இந்நிலையில் அரசியல் கட்சித் தலைவர்கள், கழக உடன்பிறப்புகள், பொதுமக்கள் எனப் பலரும் உதயநிதி ஸ்டாலினுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து, உதயநிதி ஸ்டாலின் வாழ்த்துப் பெற்றார்.

இதனைத் தொடர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ள மு.க.ஸ்டாலின், கொள்கைப் பாதையில் உழைப்பை அடையாளமாக்கி, மக்கள் பணியுடன் இலட்சியப் பயணத்தில் சிறந்திடத் தம்பி உதயநிதி ஸ்டாலினுக்கு

ப் பிறந்தநாள் வாழ்த்துகள்!

சிந்தனைகளால் வளம் பெற்ற தமிழ்ச் சமூகத்தின் எதிர்காலம் காட்சிப் பிழைகளால் தடம் மாறிடாமல் காக்க வேண்டிய பெரும் பொறுப்பைக் காலம் நம்மிடம் வழங்கியுள்ளது.

கழத்தின் ரத்த நாளமாக நான் வளர்த்த இளைஞரணியின் கொள்கைப் பணியில் இனித் தேவை வேகமல்ல, பெரும் பாய்ச்சல்!

Let your work define you!

உழைப்பால் உயர்ந்திடு!

இலட்சியப் பாதையில் முன்னேறு!

கொள்கையின் வெற்றியில் உன் வாழ்வின் வெற்றியைக் கண்டிடு” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories