தமிழ்நாடு

சட்டமன்றத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் திருவுருவ படம்; திறப்பு விழா எப்போது? சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!

ஆகஸ்ட் 2-ஆம் தேதி நடைபெறும் சட்டமன்ற நூற்றாண்டு விழாவில் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் திருவுருவப் படம் திறக்கப்படவுள்ளதாக சபாநாயகர் அப்பாவு பேட்டியளித்துள்ளார்.

சட்டமன்றத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் திருவுருவ படம்; திறப்பு விழா எப்போது? சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது, “தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு விழா மற்றும் முன்னாள் முதல்வர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் திரு உருவ படம் திறப்பு விழா நிகழ்ச்சி வரும் ஆகஸ்ட் 2-ஆம் தேதி மாலை 5 மணிக்கு தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டமன்ற பேரவை வளாகத்தில் நடைபெறுகிறது

தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தலைமையில்  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் திருவுருவப் படத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டப் பேரவை மண்டபத்தில் திறந்து வைக்க உள்ளார்.

சட்டமன்ற நூற்றாண்டு விழாவிற்கு முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  பட்ஜெட் கூட்டத் தொடர் தேதி குறித்து முறையான அறிவிப்பு பின்னர் அறிவிக்கப்படும்.

இந்த செய்தியாளர் சந்திப்பின் போது துணை சபாநாயகர் பிச்சாண்டி, அரசு தலைமை கொறடா கோவை செழியன், சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

banner

Related Stories

Related Stories