தமிழ்நாடு

இந்தியாவிலேயே சிறந்து விளங்கும் தமிழ்நாடு; மருத்துவ கட்டமைப்பை செதுக்கியவர் தலைவர் கலைஞர் -அமைச்சர் நாசர்

வளர்ந்த நாடுகளை விட மருத்துவ துறையில் இந்தியா சிறந்து விளங்குகிறது. இந்தியாவில் தமிழகம் சிறந்து விளங்குகிறது. இந்த கட்டமைப்பை செய்தவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் என அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்தார்.

இந்தியாவிலேயே சிறந்து விளங்கும் தமிழ்நாடு; மருத்துவ கட்டமைப்பை செதுக்கியவர் தலைவர் கலைஞர் -அமைச்சர் நாசர்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை வானகரத்தில் உள்ள அப்பல்லோ சிறப்பு மருத்துவமனையில் வலிப்பு நோய்க்கு அதி நவீன சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த சிகிச்சை மையத்தை தமிழக பால் வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி வைத்து தொடங்கிவைத்தார்.

அப்போது பேசிய அவர் வளர்ந்த நாடுகளை விட மருத்துவ துறையில் இந்தியா சிறந்து விளங்குகிறது. இந்தியாவில் தமிழகம் சிறந்து விளங்குகிறது. இந்த கட்டமைப்பை செய்தவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் என்றார்.

இது போன்ற பல்வேறு வகையான நோய்களுக்கு நவீன சிகிச்சை முறையை மருத்துவமனை நிர்வாகம் கொண்டு வந்து தமிழக மக்களுக்கு சிகிச்சையளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இந்த நிகழ்வின் போது திரைப்பட நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் எழுதிய நம்பிக்கை என்ற நூலை அமைச்சர் நாசர் வெலியிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி, மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் கணபதி,மருத்துவமனையின் மேலாண் இயக்குனர் சுனிதா ரெட்டி,திருவேற்காடு நகர செயலாளர் என்.இ.கே.மூர்த்தி உள்ளிட்ட மருத்துவர்கள்,செவிலியர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

banner

Related Stories

Related Stories