தமிழ்நாடு

சங்க பணத்தில் கோடிகளில் புரளும் ஆரணி ஆவின் தலைவர்; அதிமுக வசூல்ராணியை கைது செய்ய கேட்டு விளம்பர நோட்டீஸ்!

ஆவின் தலைவராக உள்ள அதிமுக பிரமுகரை கைது செய்க என்று சுவரொட்டி ஓட்டபட்டுள்ளன.

சங்க பணத்தில் கோடிகளில் புரளும் ஆரணி ஆவின் தலைவர்; அதிமுக வசூல்ராணியை கைது செய்ய கேட்டு விளம்பர நோட்டீஸ்!
DELL
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் காந்தி ரோடில் அமைந்துள்ள ஆரணி ஆவின் கூட்டுறவு பால் சங்கத்தின் தலைவராக அ.தி.மு.கவை சேர்ந்த குமுதவள்ளி என்பவரும் துணை தலைவராக சைதை சுப்பிமணியன் உள்ளிட்ட 8 இயக்குநர்கள் உள்ளனர். இதில் சங்க செயலாளராக சரவணன் என்பவர் பணிபுரிந்து வருகின்றார்.

மேலும் ஆரணி ஆவின் பால் கூட்டுறவு சங்கத்தில் சங்க விதிகளை மீறி கையூட்டு பெற்று பணியாளர்களை நியமித்துள்ளனர்.

சங்க பணத்தில் கோடிகளில் புரளும் ஆரணி ஆவின் தலைவர்; அதிமுக வசூல்ராணியை கைது செய்ய கேட்டு விளம்பர நோட்டீஸ்!
DELL

குழந்தைகள் குடிக்கும் பாலில் தண்ணீரை கலந்து டேங்கர் லாரி மூலம் குளீருட்டும் நிறுவனத்திற்கு அனுப்பி வைத்து பல லட்சம் கொள்ளையடிக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் ஆவின் சங்க வரவு செலவுகளை கணக்கு காட்டாமல் தொழிலாளர்களின் வயிற்றில் அடித்து சங்க பணத்தில் கோடிகளில் புரளும் அ.தி.மு.கவை சேர்ந்த வசூல் ராணி குமுதவள்ளியை கைது செய்ய கோரி என்று சுவரொட்டி விளம்பரங்களும் ஆரணி நகர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளன.

இது தொடர்பாக ஆவின் பால் கூட்டுறவு சங்க தலைவர் குமுதவள்ளியை தொடர்பு கொண்ட போது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட கூட்டுறவு பதிவாளர் அணுகிய போது இது சம்மந்தமாக விசாரணை செய்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

ஆரணியில் பால் கூட்டுறவு சங்கத்தில் பல முறைகேடுகள் நடப்பதாக கூறி அதன் இயக்குநர்களே சுவரொட்டி விளம்பரம் ஒட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

banner

Related Stories

Related Stories