தமிழ்நாடு

மக்களே உஷார்.. ‘ஹலோ, பேங்க் மேனேஜர் பேசுறேன்’ : வங்கிக்கு வரவழைத்து நூதன முறையில் கொள்ளையடித்த மர்ம நபர்!

சென்னை வண்ணாரப்பேட்டையில், வங்கி அதிகாரி போல் போனில் பேசி 50,000 ரூபாய் மோசடி செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மக்களே உஷார்.. ‘ஹலோ, பேங்க் மேனேஜர் பேசுறேன்’ : வங்கிக்கு வரவழைத்து நூதன முறையில் கொள்ளையடித்த மர்ம நபர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சென்னை கொருக்குப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் வினோத். இவர் திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் நகைக் கடை நடத்தி வருகிறார். இவருடைய செல்போனுக்கு அழைப்பு வந்துள்ளது. எடுத்து பேசியப் போது, இந்தியன் வங்கி மேலாளர் என்று பேசி என அறிமுகம் செய்துகொண்டு, 5 ரூபாய், 10 ரூபாய், 20 ரூபாய், 50 ரூபாய் ,100 ரூபாய் புதிய ரூபாய் நோட்டுகள் வந்திருப்பதாகவும், பழைய நோட்டுகளை கொடுத்துவிட்டு புதிய நோட்டுகளை பெற்றுச் செல்லுமாறு கூறியுள்ளார்.

உடனடியாக வினோத், தனது கடை ஊழியர் பாபுவிடம் ரூ.50 ஆயிரம் பணத்தை கொடுத்துவிட்டு சென்னை வண்ணாரப்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள இந்தியன் வங்கிக்கு சென்றுள்ளார். வங்கியின் உள்ளே நுழைந்த பாபுவை ஒரு அடையாளம் தெரியாத நபர் வழிமறித்து, ரூபாய் நோட்டு மாற்ற வந்தவரா என கேட்டு அவரிடம் இருந்த ரூ.50 ஆயிரம் பணத்தை வாங்கிக் கொண்டு, உள்ளே செல்வது போல் போக்கு காட்டி விட்டு தலைமறைவாகியுள்ளார்.

சிறிது நேரம் காத்திருந்துவிட்டு வங்கி மேலாளர் அறைக்குச் சென்று விசாரித்தபோது தான், பாபு ஏமாற்றப்பட்டதை அறிந்தார். உடனடியாக கடை உரிமையாளர் வினோத்திடம் இதுகுறித்து தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பாக கொருக்குப்பேட்டை காவல் நிலையத்தில் வினோத் புகார் அளித்தார். புகாரை பெற்றுக்கொண்ட போலிஸார் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வங்கி சம்பந்தப்பட்ட விஷயங்களில் பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லாததால் இதுபோன்று சம்பவங்கள் நடப்பதாக போலிஸார் தெரிவிக்கின்றனர்.

banner

Related Stories

Related Stories