தமிழ்நாடு

“பெண்களை ஏமாற்றி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய மோசடி கும்பல் கைது” : திருப்பூரில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

திருப்பூரில் பெண்களை ஏமாற்றி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய நபர்களை போலிஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

“பெண்களை ஏமாற்றி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய மோசடி கும்பல் கைது” : திருப்பூரில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

திருப்பூரில் மசாஜ் சென்டர்கள் என்ற பெயரிலும் வீடுகளை வாடகைக்கு எடுத்து பாலியல் தொழில் நடப்பதாக மாநகர காவல்துறைக்கு புகார்கள் வந்ததை தொடர்ந்து ஆய்வுப் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டனர்.

திருமுருகன் பூண்டி, கூத்தம்பாளையம் ஜே.பி நகர் பகுதியில் உள்ள வீட்டில் காவல்துறையினர் ஆய்வு செய்தனர். அப்பொழுது அந்த வீட்டில் அதே பகுதியை சேர்ந்த விக்னேஷ், வசந்த் ஆகிய இருவரும் மூன்று பெண்களை ஏமாற்றி வெளி மாவட்டங்களில் இருந்து அழைத்து வந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தபட்டது தெரிய வந்தது.

அதனை தொடர்ந்து இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் வீட்டில் இருந்த மூன்று பெண்களையும் மீட்டு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாநகர காவல் துணை ஆணையர், அரவிந்த் திருப்பூர் மாநகரில் மசாஜ் சென்டர் என்ற பெயரிலும் தனி வீடுகளை வாடகைக்கு எடுத்தும் பாலியல் குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவதாகவும், தொடர்ந்து காவல்துறையினருக்கு தகவல் வருவதாகவும் மேலும் இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இதேபோன்று தொடர்ந்து மாநகரில் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

banner

Related Stories

Related Stories