தமிழ்நாடு

விருதுநகர் வீதிகளில் மணக்கும் ‘செந்தமிழில் பெயர்கள்’: ஆத்திபட்டி ஊராட்சி மன்றத் தலைவரின் அசத்தல் முயற்சி!

அடுத்த தலைமுறைக்கு மொழியின் பெருமையை அறியச் செய்யும் வகையில் விருதுநகர் மாவட்டம் ஆத்திபட்டி ஊராட்சி மன்றத் தலைவி ஏற்பாட்டில் வீதிகளுக்கு தூய தமிழ்ப் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.

விருதுநகர் வீதிகளில் மணக்கும் ‘செந்தமிழில் பெயர்கள்’: ஆத்திபட்டி ஊராட்சி மன்றத் தலைவரின் அசத்தல் முயற்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

அடுத்த தலைமுறைக்கு மொழியின் பெருமையை அறியச் செய்யும் வகையில் விருதுநகர் மாவட்டம் ஆத்திபட்டி ஊராட்சி மன்றத் தலைவி ஏற்பாட்டில் வீதிகளுக்கு தூய தமிழ்ப் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. இதுகுறித்து “நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்” நாளேடு வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது :-

“மொழிதான் கலாச்சாரத்துக்கு செல்லும் பாதை; இதுமக்கள் எங்கிருந்து வந்தார்கள்; எங்கே அவர்கள் சென்று கொண்டிருக்கிறார்கள் என்று சொல்கிறது” என்று அமெரிக்க எழுத்தாளர் ரீட்டா மோபிரவுன் கூறிய சொற்களை விருது வாக்காக எடுத்துக் கொண்டு அடுத்தத் தலைமுறையினருக்கு தமிழின் பெருமையைக் கற்பிக்கும் திட்டத்தை ஊராட்சி மன்றத் தலைவி ஒருவர் மேற்கொண்டுள்ளார்.

மொழி அறிவை இழந்துவிடக்கூடிய சூழல்!

அருப்புக்கோட்டையை அடுத்துள்ள ஆத்திபட்டி ஊராட்சிமன்றத் தலைவியான ராஜேஸ்வரி (வயது 50) தன்னுடைய கணவர் யோகவாசு தேவன் (69) ஆகியோர் தெருக்களுக்கு தமிழ்ப் பெயர்களைச் சூட்டும் பணியைத் தொடர்ந்து செய்து வருகிறார்கள். யோக வாசுதேவன் அதே ஊராட்சியில் 2006ஆம் ஆண்டு ஊராட்சிமன்றத் தலைவராக இருந்தார். அப்போது பெயர் சூட்டப்படாமல் இருந்த தெருக்களுக்கு தமிழ்ப்பெயர்களைச் சூட்டத் தொடங்கினார். அவர் சுமார் 50 தெருக்களுக்கு தமிழ்ப்பெயர்களை வெற்றிகரமாகச் சூட்டினார்.

விருதுநகர் வீதிகளில் மணக்கும் ‘செந்தமிழில் பெயர்கள்’: ஆத்திபட்டி ஊராட்சி மன்றத் தலைவரின் அசத்தல் முயற்சி!

அவருடைய பதவிக்காலம் நிறைவடைந்ததால் அந்தப் பணி நிறுத்தப்பட்டிருந்தது. அவருடைய மனைவி ராஜேஸ்வரி சுயேச்சையாகப் போட்டியிட்டு ஊராட்சிமன்றத் தலைவராக 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பொறுப்புக்கு வந்தார். ஏற்கனவே பழைய தெருக்களுக்கு பெயர் சூட்டப்பட்டிருந்த நிலையில் தமிழ்ப் பெயர் சூட்டிடும் பணியைத் தொடர்ந்து செய்ய ராஜேஸ்வரி முடிவு செய்தார்.

“நாங்கள் என் கணவரின் பணியைத் தொடர்ந்து செய்ய முடிவு செய்தோம். அவர் எங்களுக்கு பெயர்களைத் தேர்ந்தெடுப்பதில் உதவி செய்தார். எதிர்காலத்தில் நமது சந்ததியினர் மொழி அறிவை இழந்துவிடக்கூடிய அச்சுறுத்தல் உள்ளது. எனவே நாங்கள் எதிர்காலத் தலைமுறையினருக்கு கொண்டு செல்ல விரும்பினோம். அதனால்தான் இந்தப் பணியில் ஈடுபட்டோம்” என்று ஊராட்சி மன்றத் தலைவி ராஜேஸ்வரி கூறியுள்ளார்.

வைகை வீதி, நிறைமதி வீதி, செவ்வாழை வீதி! இவ்வாறு மீண்டும் தொடங்கப்பட்ட இந்தப் பணியில் ஒவ்வொரு பகுதியில் உள்ள தெருக்களுக்கும் ஒவ்வொரு வகையில், “வைகை வீதி, செவ்வாழை வீதி, நிறைமதி வீதி” என்பது போன்று மலர்கள், மாதங்கள், தாவரங்களின் பெயர்களைத் தெருக்களுக்கு சூட்டினோம். இந்தப் பெயர்கள் அடங்கிய வீதிகளின் வரைபடங்கள் மக்கள் இடங்களைக் கண்டறிய வசதியாக கூகுள் இணைய தளத்திலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

மலர்கள், மாதங்களின் பெயர்கள்!

“ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள தெருக்களுக்கு மலர்கள் பெயர்கள் மட்டுமே சூட்டப்பட்டுள்ளன. மற்றொரு பகுதியில் உள்ள தெருக்களுக்கு மாதங்களின் பெயர்கள் என்று வகைப்படுத்தி பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன” என்று ஊராட்சி மன்றத் தலைவி ராஜேஸ்வரி மேலும் கூறியுள்ளார்

banner

Related Stories

Related Stories