தமிழ்நாடு

சொந்த மாவட்ட மக்களுக்கும் நன்மை செய்யாத எடப்பாடி; குண்டும் குழியுமான அதிமுக அரசால் போடப்பட்ட சாலை!

சேலத்தில் அதிமுக ஆட்சியில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன் போடப்பட்ட சாலையில் பிளவு ஏற்பட்டு குழி ஏற்பட்டதால் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது

சொந்த மாவட்ட மக்களுக்கும் நன்மை செய்யாத எடப்பாடி; குண்டும் குழியுமான அதிமுக அரசால் போடப்பட்ட சாலை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சேலம் மாநகராட்சி 45வது கோட்டத்திற்கு உட்பட்ட குகை மாரியம்மன் கோவிலுக்கு செல்லும் சாலை, தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் பிரதான சாலையாகும்.

இந்த பகுதியில் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் பாதாள சாக்கடை திட்டத்திற்காக சாலையில் குழி தோண்டி குழாய்கள் பதிக்கப்பட்ட பின்னர், புதியதாக சாலை போடப்பட்டது. இது போன்று மாநகரின் பல்வேறு பகுதிகளில் போடப்பட்ட சாலைகள் தரம் இல்லாமல் பெயரளவில் போடப்பட்டு உள்ளதாகவும், இதில் முறைகேடு நடந்து உள்ளதாகவும் திமுக உள்ளிட்ட அரசியல் கட்சியினரும், பல்வேறு அமைப்பினரும், பொது மக்களுக்கும் அப்போதே புகார் தெரிவித்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

சொந்த மாவட்ட மக்களுக்கும் நன்மை செய்யாத எடப்பாடி; குண்டும் குழியுமான அதிமுக அரசால் போடப்பட்ட சாலை!

இந்த நிலையில் கடந்த இரு தினங்களாக பெய்த மழையில் குகை மாரியம்மன் கோவிலுக்கு செல்லும் பிரதான சாலையில் திடீர் என பள்ளம் ஏற்பட்டது. சாலையின் இரு புறத்திலும் பள்ளம் ஏற்பட்டதால் அந்த பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையும் மீறி சென்ற சில வாகனங்கள் பள்ளத்தில் சிக்கின.

சொந்த மாவட்ட மக்களுக்கும் நன்மை செய்யாத எடப்பாடி; குண்டும் குழியுமான அதிமுக அரசால் போடப்பட்ட சாலை!

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும் போது, கடந்த அதிமுக ஆட்சியில் சேலம் மாநகரில் போடப்பட்ட பல்வேறு சாலைகள் தரம் இல்லாமல் போடப்பட்டு உள்ளதாகவும் இதன் ஒரு பகுதியாக இந்த பிரதான சாலையும் தரம் இல்லாமல் போடப்பட்டதால் ஒரு ஆண்டுகளாகவே சாலையில் பள்ளம் ஏற்பட்டு பாதிப்புக்கு உள்ளாகி உள்ளதாகவும் இந்த சாலை மட்டுமல்லாமல் பல்வேறு இடங்களில் போடப்பட்ட சாலைகளில் தார் பெயர்ந்து வந்து உள்ளதாகவும் குற்றம் சாட்டும் மக்கள், இது போன்ற தரம் இல்லாத சாலைகளை போட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் , இதில் நடந்து உள்ள முறைகேட்டை வெளியே கொண்டு வர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

banner

Related Stories

Related Stories