தமிழ்நாடு

"நான் கன்னடன்னு பேசிட்டு இங்க ஏன் வந்தீரு..?" : கேள்விகளால் துளைத்த இளைஞர் - திணறிப்போன அண்ணாமலை!

பா.ஜ.க தலைவர் அண்ணாமலையைப் பார்த்து இளைஞர் ஒருவர் சரமாரியாகக் கேள்வி கேட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

"நான் கன்னடன்னு பேசிட்டு இங்க ஏன் வந்தீரு..?" : கேள்விகளால் துளைத்த இளைஞர் - திணறிப்போன அண்ணாமலை!
DIGI TEAM 1
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு பா.ஜ.க தலைவராக இருந்த எல்.முருகன் ஒன்றிய அமைச்சரவையில் இடம்பெற்றதை அடுத்து அண்ணாமலையை அடுத்த மாநில தலைவராக பா.ஜ.க தலைமை அறிவித்துள்ளது.

இதையடுத்து அண்ணாமலை நாளை தலைவராக பதவியேற்றுக் கொள்கிறார். இந்நிலையில் நாமக்கல், ராசிபுரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை பங்கேற்றார்.

அப்போது, அங்கிருந்து இளைஞர் ஒருவர், “நான் தமிழனே இல்லை. கன்னடர் என நீங்கள் பேசும் வீடியோ சமூக வலைத்தளங்களில் உலா வருகிறதே” எனக் கேட்டார். மேலும், “அப்படி பேசிய நீங்கள் ஏன் இங்கு வந்தீர்கள்” என தொடர்ந்து அந்த இளைஞர் அண்ணாமலையைப் பார்த்து கேட்டதால், அங்கு பரபரப்பு நிலவியது.

"நான் கன்னடன்னு பேசிட்டு இங்க ஏன் வந்தீரு..?" : கேள்விகளால் துளைத்த இளைஞர் - திணறிப்போன அண்ணாமலை!
DIGI TEAM 1

இதையடுத்து அண்ணமாலை அந்த இளைஞருக்கு காவித்துண்டு அணிவிக்கும் போது, அதை ஏற்க மறுத்தார். உடனே அங்கிருந்த பா.ஜ.கவினர் இந்த இளைஞரை அங்கிருந்து இழுத்துச் சென்றனர். பின்னர் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை காரில் அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.

தலைவராகப் பொறுப்பேற்பதற்கு முன்பே அண்ணாமலை கடும் எதிர்ப்பைச் சந்தித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories