தமிழ்நாடு

”NEET வேண்டாம் என்பதே தி.மு.க. அரசின் 100% நோக்கம்” - அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிரடி!

நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற வேண்டும் என்பது தமிழ்நாடு அரசின் உறுதியான நிலைப்பாடு என மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

”NEET வேண்டாம் என்பதே தி.மு.க. அரசின் 100% நோக்கம்” - அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிரடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அம்மா பூங்காவில் முன் களப்பணியாளர்களான தூய்மைப் பணியாளர்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கிய பின் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்,

புதிதாக பதவியேற்றுள்ள ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சரை சந்திப்பதற்காக நேரம் கேட்கப்பட்டிருந்த நிலையில் வரும் வியாழக்கிழமை நேரம் கிடைத்துள்ளதால் டெல்லி செல்ல உள்ளதாகவும், இந்த சந்திப்பின்போது தமிழ்நாட்டிற்கு கூடுதலாக கொரோனா தடுப்பூசி ஒதுக்கவேண்டும் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளை விரைவில் தொடங்க வேண்டும் தமிழ்நாட்டில் புதிதாக அமைய உள்ள பதினோரு மருத்துவ கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை உள்ளிட்ட தமிழ்நாடு நலன் சார்ந்த கோரிக்கைகளை வலியுறுத்த உள்ளதாக தெரிவித்தார்.

நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு பெற வேண்டும் என்பதே தமிழ்நாடு அரசின் உறுதியான நிலைப்பாடு, இருந்தபோதும் மாணவர்களுக்கு நீட் தேர்வால் சிறிதளவேனும் பிரச்சனை ஏற்படக்கூடாது என்பதற்காக தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் நீட் பயிற்சிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் கடந்த ஆட்சியின்போது நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரி சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டது. கடந்த காலங்களில் உயர்கல்வி தொடர்வதற்காக கொண்டுவரப்பட்ட நுழைவுத் தேர்வை தவிர்ப்பதற்காக திமுக அரசு குழு அமைத்து நுழைவுத்தேர்வு வராமல் தடுத்தது.

அதேபோல் தற்பொழுதும் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி ஏ கே ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு நாளை சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவது பெரிய சட்டப்போராட்டம் என்பதனால் மாணவர்கள் தேர்வுக்கு தயாராவதில் எந்த தவறும் இல்லை.

சைதாப்பேட்டையில் உள்ள அம்மா பூங்கா கடந்த காலங்களில் சமூக விரோதிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. இதை சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது மீட்டு மக்கள் பயன்படுத்தும் பூங்காவும் உடற்பயிற்சி கூடங்கள் அமைக்கப்பட்டது. தற்பொழுது மேலும் இது விரிவாக்கம் செய்து கால்பந்தாட்ட மைதானமும் அமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்படுத்த ஏதுவான பூங்காவாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories