தமிழ்நாடு

"அ.தி.மு.க ஆட்சி டெண்டர்களில் முறைகேடுகள் இருந்தால் கடும் நடவடிக்கை" : அமைச்சர் கே.என்.நேரு உறுதி!

அ.தி.மு.க அரசு கொண்டு வந்த திட்டங்களை நிறுத்த வேண்டும் என்ற எண்ணம் சிறிதுகூட முதலமைச்சரிடம் இல்லை என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

"அ.தி.மு.க ஆட்சி டெண்டர்களில் முறைகேடுகள் இருந்தால் கடும் நடவடிக்கை" : அமைச்சர் கே.என்.நேரு உறுதி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை சாந்தோம் நெடுஞ்சாலையின் இருபுறங்களிலும் மழைநீர் வடிகால் கட்டும் பணிகள் 50 கோடி ரூபாய் மதிப்பில் நடைபெற்று வருகிறது. இதனை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து, ராஜீவ்காந்தி சாலையில் நடைபெற்று வரும் பக்கிங்ஹாம் கால்வாய் மேம்பாட்டு திட்டத்தையும் அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கே.என்.நேரு, "அடையாறு மற்றும் கூவம் ஆறுகளில் கலக்கும் கழிவுகளைச் சுத்திகரிக்க சேத்துப்பட்டில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளது. இதுபோன்று சென்னையில் வேறு சில இடங்களிலும் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மழைக்காலம் வருவதால் ட்ரோன் மூலமாக கொசு ஒழிப்பு பணி நடைபெற்று வருகிறது. மேலும், மிதக்கும் இயந்திரங்கள் மூலம் கால்வாய்களில் வளர்ந்திருக்கும் ஆகாயத் தாமரையை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. அதேபோல் மாநகராட்சி சார்பில் நடைபெற்று வரும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

"அ.தி.மு.க ஆட்சி டெண்டர்களில் முறைகேடுகள் இருந்தால் கடும் நடவடிக்கை" : அமைச்சர் கே.என்.நேரு உறுதி!
Kalaignar TV

சென்னையில் உள்ள 141 கி.மீ கால்வாய்களைச் சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது. சென்னையில் மழை காலத்தில் வெள்ளபெருக்கு ஏற்படாமல் இருக்க தண்ணீர் நிற்கும் இடங்களைக் கண்டறியும் பணி நடைபெற்று வருகிறது.

1,400 கோடி ரூபாய் செலவில், சென்னையில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணிக்கு, மிக விரைவில் டெண்டர் விடப்படும். கடந்த ஆட்சியில் போடப்பட்ட டெண்டர்கள் முறைகேடுகள் ஆய்வில் உள்ளது. கடந்த அ.தி.மு.க அரசு கொண்டு வந்த திட்டங்களை நிறுத்த வேண்டும் என்ற எண்ணம் சிறிதுகூட முதலமைச்சரிடம் இல்லை" எனத் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories