தமிழ்நாடு

“உலக நாடுகளுக்கு வழங்குவதை விட தமிழகத்திற்கு குறைவான தடுப்பூசிகளே வழங்கப்படுகிறது” : தயாநிதி மாறன் MP !

உலக நாடுகளுக்கு தடுப்பூசி வழங்குவதை விட, தமிழகத்திற்கு குறைவாக தடுப்பூசியை தான் ஒன்றிய அரசு வழங்குவதாக மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் குற்றம் சாட்டினார்.

“உலக நாடுகளுக்கு வழங்குவதை விட தமிழகத்திற்கு குறைவான தடுப்பூசிகளே வழங்கப்படுகிறது” :  தயாநிதி மாறன் MP !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

அகில இந்திய சிகை அலங்கரிப்பு சங்கத்தின் சார்பில் கொரொனா தோற்று காலத்தில் வேலைவாய்ப்பு இன்றி தவிக்கும் 100க்கும் மேற்பட்ட சிகை அலங்கார நிபுணர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்று வருகிறது. இந்த் நிகழ்ச்சியில் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் சட்டமன்ற உறுப்பினர் எழிலன், தென்சென்னை மேற்கு மாவட்ட பொறுப்பாளர் சிற்றரசு உள்ளிட்டோர் உடனிருந்தனர்

அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், கொரொனா ஊரடங்கு காலத்தில் யாரும் பசியால் பாதிக்க கூடாது அவர்களுக்கு உதவ வேண்டும் என்று முதல்வர் தெரிவித்து இருந்தார். அதன் அடிப்படையில் அனைத்து நடவடிக்கையும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் எடுத்து வருகிறோம். தற்பொழுது கொரோனா தொற்றின் பாதிப்பு தமிழகத்தில் குறைய தொடங்கி இருக்கிறது.

சென்னையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை பூஜியத்தை தொட்டு இருக்கிறது. இதனால் பொது மக்கள் கொரொனா பாதிப்பு குறைந்து விட்டது என்று அஜாக்கிரதையாக இருக்கக்கூடாது. முக கவசம், தனிமனித இடைவெளியை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.

தடுப்பூசி தட்டுபாடு நிலவி வருகிறது. உலக நாடுகளுக்கு தடுப்பூசி வழங்குவதை விட தமிழகத்திற்கு குறைவாக தடுப்பூசியை தான் ஒன்றிய அரசு வழங்குகிறது. மேலும், வருகின்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் தடுப்பூசி அதிகமாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறோம் என தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories